tamilnadu

img

மணிப்பூர் பயங்கரம் : நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பது ஏன்?

சென்னை, ஜூலை 21- மணிப்பூர் சம்பவம் தேசிய அவமானம் என்று கூறும் பிரதமர், அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக சென்னை யில் வெள்ளியன்று (ஜூலை 21)  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: மணிப்பூரில் இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாக் கப்பட்டதற்கு உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மே 4  அன்று நடைபெற்ற சம்பவம்  குறித்து வழக்கு பதியப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப் படவில்லை. ஊடகங்களில் வெளி வந்த பிறகு சிலரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வை வெளியிட்ட டிவிட்டர் நிறு வனத்திடம் ஒன்றிய அரசு விளக்கம் கேட்டுள்ளது சரி. ஆனால், விளக்கம் கேட்கும் பாஜ கவின் நோக்கம் தவறாக உள் ளது. பாஜக நடவடிக்கை எடுக்கா மல் காலம் தாழ்த்தியதால், வெளி யுலகிற்கு பிரச்சனையை கொண்டு வந்து நியாயம் பெற வேண்டும் என்பதற்காக டிவிட்டர் நிறுவனம் பதிவிட்டுள்ளது. இதற்கு பாஜகதான் விளக்கம் தர வேண்டும். ஒன்றிய பாஜக அரசும், மாநில பாஜக அரசும் பெண்களை பாதுகாக்கத் தவறி  இருக்கிறது. மலைவாழ், சிறு பான்மை மக்கள் மீது நடத்தப் படும் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது.

மணிப்பூர் கலவரம் தொடர் பாக அம்மாநில முன்னாள் முத லமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கொண்ட குழு பிரதமரை சந்திக்க  10 நாட்கள் தில்லியில் காத்திருந்த னர். இந்த குழுவை சந்திக்காமல் பிரதமர் கர்நாடக தேர்தல் பிரச்சா ரம், அமெரிக்கா, பிரான்ஸ் நாடு களுக்கு சென்றார். ஊடகங் களில் செய்தி வந்ததால், வேறுவழி யின்றி தற்போது வாயை திறந்துள் ளார். இந்த பிரச்சனை குறித்து அலு வல்களை ஒத்திவைத்து நாடாளு மன்றத்தில் விவாதிக்க பாஜக மறுக்கிறது. இது எவ்வளவு கொடூ ரமானது; வன்மையாக கண்டிக்க த்தக்கது. மணிப்பூர் சம்பவம் தேசிய அவமானம் என்று கூறும் பிரதமர், நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பது ஏன்? பிரச்சனையை விவாதிக்காமல் காலம் தாழ்த்தும் செயலில் ஈடுபடுகிறது. பிரச்சனையை விவாதிக்காமல் நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடித்துவிட நினைக்கிறது பாஜக அரசு. கடந்த கூட்டத் தொடரில் எந்த பொருள் குறித்தும் விவாதிக்கா மல் முடித்துவிட்டார்கள். எதிர்க் கட்சிகள் எழுப்பும் பிரச்சனை களை எதிர்கொள்ள பாஜகவிற்கு திராணி இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக பாஜக மேற்கொண்ட வெறுப்பு அரசியல்தான் இந்த வன்முறை, படுகொலைக்கு காரணமாக உள்ளது. இந்த சம்பவங்களுக்கு ஒன்றிய பாஜக அரசும், மாநில பாஜக அரசும் பொ றுப்பேற்க வேண்டும். மணிப்பூர் மாநில பாஜக ஆளும் தகுதியை இழந்து விட்டது. முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாவட்டங்களில் இயக்கம் நடைபெறும்.

பொதுசிவில் சட்டம்

பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றி னால், இந்தியாவில் உள்ள மக்களை மத அடிப்படையில் பிரிப்பதற்கும், மதகலவரங் கள், மோதல்கள் ஏற்பட வழிவகுக்கும். அரசியல் ஆதாயத்திற்காக இதை செய்யக் கூடாது. பொதுசிவில் சட்டம் என்பது, அனைத் துப் பகுதி மக்களிடமும் போதிய விழிப்பு ணர்வையும், புரிதலையும் உருவாக்கிய பிறகு, படிப்படியாக நீண்டகால பிரச்சாரம் செய்து, கருத்துதொற்றுமை ஏற்படுத்தி நிறை வேற்ற வேண்டிய சட்டம். அதை அறை குறையாக நிறைவேற்றுவது பாஜக-வின் அரசியலுக்கே பயன்படும். அரசியல் ஆதாயத்திற்காக பாஜக மேற் கொண்ட செயல்களால் மணிப்பூர் பற்றி எரிகிறதோ, அதேபோன்ற நிலையை இந்தியா முழுவதும் உருவாக்கக் கூடாது. இதுதொடர்பாக ஆகஸ்ட் 9-ஆம் தேதி சென்னையில் மாபெரும் கருத்தரங்கை நடத்த உள்ளோம். அதில் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் பங்கேற்கிறார். பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சிகள் ஒன்று சேரத் தொடங்கியதும் பாஜக அச்சமடைந்துள்ளது. பட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தபோது, பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றப் போவதாக பிரதமர் பதற்றத்தோடு அறிவித்தார். அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடந்த நிலையில், இத்தனை ஆண்டுகளாக கூட்டாத தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை நடத்தி னார். அது சிதறுண்ட கட்சிகளின் கூட்டணி யாக உள்ளது என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜக ஒருபோதும் பழங்குடியினர், தலித் மக்களுக்கு ஆதரவாக இருந்த தில்லை. வன உரிமைச் சட்டத்தில் மோசமான திருத்தத்தை நாடாளுமன்ற கூட்டத்தொட ரில் நிறைவேற்ற உள்ளனர். இதனால் வனத்தில் உள்ள மக்கள் தங்கள் உரிமை களை இழக்க நேரிடும். வன நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு ஒப்படைக்கும் வகை யில் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரத்தை ஆய்வு செய்தால், பழங்குடி மக்களை வெளியேற்றிவிட்டு, கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் வகை யில் வன்முறை நிகழ்த்தப்படுகிறது என்றார். ‘‘நாடாளுமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு ரவீந்திரநாத் எம்.பி-யை அழைத்தது முறையல்ல. இந்த நடவடிக்கையின் வாயிலாக அரசியல் செல்வாக்கு செலுத்த பாஜக நினைக்கிறதா? என தெரியவில்லை’’ என்று மற்றொரு கேள்விக்கு பாலகிருஷ்ணன் பதிலளித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், எஸ்.கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

மதுரையில் நாளை மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு

தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து அரசியல் வரம்புகளை மீறி செயல்பட்டு வருகிறார். அவரை திரும்பப்  பெறக் கோரி தமிழக எம்.பி.,க்கள் குடியரசு தலைவரிடம் மனு அளித்தனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும் ஆளுநர் தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் உள்ளார். மாநில அரசுக்கு போட்டி அரசை ஆளுநர் நடத்த முயற்சிக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு போன்றவற்றின் வாயிலாக திமுக-வை பழிவாங்க, மிரட்டி பணிய வைக்க பாஜக முயற்சிக்கிறது. நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அமலாக்கத்துறை எதற்காக ரெய்டு நடத்தி கைது செய்ய வேண்டும்?

இந்திய வரலாற்றில் அதிக ஊழலுக்கு உள்ளான கட்சி பாஜக. அண்மையில் பிரான்ஸ் நாட்டிற்கு பிரதமர் சென்றார்.  ரஃபேல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக அந்த நாட்டில் விசாரணை நடந்து வருகிறது. அதற்கு இந்திய பிரதமர் ஒத்துழைக்க வேண்டுமென்று அந்நாட்டு நீதிபதி கடிதம் எழுதுகிறார். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீதுள்ள ஊழல் புகார்களை மறைக்க, எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் ரெய்டுநடத்துகிறார்கள். இவ்வாறாக பல வழிகளில் திட்டமிட்டு மாநில உரிமைகளை பறித்து வருகிறது மோடி அரசு. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 23 ஞாயிறன்று மாலை மதுரையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, திமுக அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. 

 

 

;