tamilnadu

img

பாஜக தலைவர்களுக்கு பத்திரிகையாளர்கள் கண்டனம்

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்தும் பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கம் பிரஸ் கிளப் வளாகத்தில் அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சென்னை பத்திரிகையாளர் மன்றம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (டியூஜே), மெட்ராஸ் யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஏராளமானோர் பங்கேற்றனர்.