tamilnadu

கூட்டாக வங்கி ஈரான்-சிரியா புதிய முயற்சி

டமாஸ்கஸ், ஜன.17- ஈரானும், சிரியாவும் இணைந்து ஒரு வங்கியை உரு வாக்கப் போகின்றன என்ற அறிவிப்பை ஈரானின் சாலை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ரோஸ்தம் காசிமி அறி வித்துள்ளார். சிரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள காசிமி, அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அஸ்ஸாத்தைச் சந்தித்து, சிரியாவின் பொரு ளாதார நிலை பற்றி விவாதித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதோடு, சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பைசல் மெக்தாத்து டன் நடத்திய பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் இணைந்து வங்கி ஒன்றை உருவாக்குவது என்ற திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் சிரியாவின் உறவில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இருதரப்பும் பலனளிக்கக்கூடிய இந்த உறவு அமையும் என்று இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டாக தாராள வர்த்தக மண்டலங்களையும் அமைக்கப் போகிறார்கள். இது குறித்த ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெ ழுத்தாகியுள்ளன. அடுத்த கட்ட நடவடிக்கைகள் மும்முர மாக நடைபெற்று வருவதைத் தற்போது காசிமி உறுதிப் படுத்தியிருக்கிறார். சிரியா-ஈரான் கூட்டு பொருளாதாரக் குழு அமைக்கப் பட்டு பல்வேறு திட்டங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். இந்தக் குழுவின் தலைவராக காசிமி செயல்பட்டு வருகிறார். டிராக்டர்கள் மற்றும் வேறு பல விவசாய எந்திரங்களை சிரியாவில் தயாரிக்கும் திட்டங்களை ஈரான் முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டங்கள் சிரியாவின் பொருளாதாரத்தில் சாதகமான பலன்களை உரு வாக்குவதோடு, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறத்தில், சிரியாவில் உள்ள அமெரிக்காவின் முகாம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் கட்டுப் பாட்டில் உள்ள எண்ணெய்க் கிணறுகள் உள்ள பகுதிகளிலும் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்தத் தாக்குதல்களுக்கு யாரும் இதுவரையில் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.