ஜேகே டயர் கார் பந்தயம் கோவையில் நடைபெற்றது
கோவை ,செப்.28- ஜேகே டயர் கார் பந்தயத்தின் நடப்பு சீசன் இரண்டா வது சுற்று போட்டிகள் கோவையில் உள்ள கரி மோட்டார்ஸ் ஓடுதளத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. நாட்டின் இளம் பந்தய வீரர்கள் தொழில்முறை போட்டி யாளர்கள் வளர்ந்து வரும் இளம் வீரர்கள் உற்சாகமாக இந்த போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜே கே டயர் லெவிடாஸ் கோப்பை, ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பை, ஜே.கே. டயர் நோவிஸ் கோப்பை வழங்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் வெங்கட் மாருதி காரில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டார். அவருடன் மீரா எர்டா கவுரவ ஓட்டுநராக கலந்து கொண்டு இந்த போட்டியில் சிறப்பி டம் பெற்றார். ஜிடிகோப்பை காண கார் பந்தயத்தில் கரி மோட்டார் ஸ்பீட் வே அணியின் வழக்கமான போட்டி யாளர்களான நவநீத்குமார் அனிஷ் ஷெட்டி ஆகியோர் இடையே கடுப்போட்டியில் நிலவியது. கடைசி சுற்றில் நவ நீத்குமார் வெற்றி பெற்றார்.
