சிவகாசி, ஜூலை 9- விருதுநகர் மாவட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிர மாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் முதற்கட்ட மாக 102 தீக்கதிர் சந்தாக்கள் பெறப்பட்டு, கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறனி டம் வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக தீக்கதிர் சந்தா வழங்கும் விழா சிவகாசியில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ஒன்றியச் செய லாளர் பி.பாலசுப்பிரமணி யன், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் எம்.முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப் பினர் பி.என்.தேவா துவக்கி வைத்தார். மாவட்டச் செய லாளர் கே.அர்ஜூனன் விளக்கிப் பேசினார்.
முடி வில் இரண்டாம் கட்டமாக பெறப்பட்ட 183 சந்தாக்களுக் கான தொகை 2 லட்சத்து 2ஆயிரத்து 400 ரூபாய் மாநி லச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு : காரியாபட்டி 22, அருப்புக் கோட்டை நகர் 12, திருச்சுழி 4, அருப்புக் கோட்டை ஒன்றியம் 6, விருது நகர் தெற்கு 7, சாத்தூர் நகர் 20, சாத்தூர் ஒன்றியம் 19, வெம்பக்கோட்டை 9, சிவகாசிநகர் 48, சிவகாசி ஒன்றியம் 36ஆகும். நிகழ்ச்சியில் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், கொரோனா பெருந்தொற்று ஏராளமான மனிதர்களை மட்டுமல்ல பல சிறு, குறுந் தொழில்களையும் பாதிப்ப டையச் செய்துவிட்டது. அதில் பத்திரிகைகளும் அடங்கும். பொது முடக்கக் காலத்திலும் தீக்கதிர் அலு வலகத்திற்கு ஊழியர்கள் வந்தனர். தொடர்ந்து வாட்ஸ்- அப் குரூப் மூலம் தீக்கதிரை அனைவருக்கும் கிடைக்கச் செய்தனர். தீக்கதிருக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. வரும் ஜூன் 29 அன்று 61வது ஆண்டில் தீக்கதிர் அடி யெடுத்து வைக்கிறது. நமது கட்சி துவங்கும் முன்பே தீக்கதிர் துவங்கப்பட்டது. நமது பத்திரிகையின் அதிகாரப்பூர்வ முதல் ஆசிரியராக தோழர் என். சங்கரய்யா பணியாற்றி னார். அவர் தற்போதும் காலை யில் எழுந்தவுடன் தீக்கதிரை படிக்கின்றார். தனது 102 ஆவது வயதிலும் லென்ஸ் உதவியுடன் தீக்கதிரைப் படித்து வருகிறார். குரல் வடிவிலும் செல்போன் மூலம் கேட்டு வருகிறார். எனவே, நாம் அனைவரும் தீக்கதிரை வாங்கிப் படிக்க வேண்டும்.
அதேபோல் கட்சியின் முன்னாள் மாநிலச் செய லாளர் தோழர் ஏ.நல்ல சிவன் எப்போதும் தனது தோள் பைக்குள் தீக்கதிரை வைத்து படிப்பார். “கட்சி பத்திரிகை ஒரு அமைப்பா ளன்” என்று மாமேதை லெனின் கூறியுள்ளார். பிற ஊடகங்கள் பேசத் தயங்குவதை பேசுவது நமது தீக்கதிர். தொழில்கள் பாதிப்பு, தொழிலாளர்கள் பாதிப்பு குறித்தும், தொழில்களையும், தொழி லாளர்களையும் பாது காப்பது பற்றியும் மிகச் சரி யாக குறிப்பிடுவது நமது தீக்கதிர் தான். எனவே அனைவரும் தீக்கதிர் வாங்கிப் படிக்க வேண்டும். நூலகங்கள், தேநீர் கடை கள், சலூன் கடைகள் மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களுக்கும் தீக்கதிரை கொண்டு செல்வது நம் அனைவரின் கடமை யாகும் என்று தெரிவித்தார். மேலும், இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.குருசாமி, கே.முருகன், இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சாத்தூரில் நடைபெற்ற சந்தா வழங்கும் நிகழ்ச்சி யில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.விஜயமுருகன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.விஜயகுமார், நகர் செயலாளர் பி.பெத்தராஜ், ஒன்றிய செயலாளர் எஸ்.சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.