tamilnadu

img

பொதுமக்களிடமிருந்து ரூ.600 கோடி மோசடி நிதியை திரும்பபெற முதலீட்டாளர்கள் சந்திப்பு

குழித்துறை, செப். 7- பொதுமக்களிடமிருந்து ரூ.600 கோடியை மோசடி செய்த நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்திடமிருந்து முதலீடுகளை திரும்பப் பெறுவதற் காக முதலீட்டாளர்கள் சந்திப்பு நடை பெற்றது. கன்னியாகுமரி மாவட்டம்  பளுகல்  மத்தம் பாலா பகுதியில் நிர்மல் கிருஷ்ணா என்ற தனியார் நிதி நிறு வனம் செயல்பட்டு வந்தது.  இந்த நிதி  நிறுவனத்தில் குமரி மாவட்டம், திரு வனந்தபுரம்  மாவட்டங்களைச் சேர்ந்த  மக்கள் ரூ.600 கோடிக்குமேல் பணம்  முதலீடு செய்திருந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் நிதி நிறுவனம் மூடப் பட்டது. இதனால் நிதி முதலீடு செய்த வர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. நிதி முதலீட்டாளர்கள் கடந்த 6 வருடங்களாக பல கட்ட போராட்டங் களை நடத்தினர். எனினும் முதலீடு  செய்தவர்களுக்கு நிதி கிடைக்க வில்லை. இது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் நடந்து வரும் நிலையில்  நிதி முதலீட்டாளர்கள் அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து பாறசாலை தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு எஸ்.எம். நாயர்  தலைமை வகித்தார். தினேஷ்  வர வேற்றார். ஹரிகரன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். கிருஷ்ண பிரசாத்,  ஹரி, பிரகாஷ் சந்திரன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் முதலீட்டாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

;