மதுரை, ஜூலை 8- கீழடி அகழாய்வில் களிமண் மற்றும் சுண்ணாம்புக் கலவை கொண்டு அமைக்கப்பட்ட தரைத் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் ஒன்பது குழிகளில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இதில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளு டன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கின உரு வங்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட தக்களிகள், ஆட்டக்காய் கள், வட்டச்சில்லுகள், கண்ணாடி மணிகள், அஞ்சனக் கோல்கள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனை கள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள் என 183 தொல் பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. முதற்கட்டமாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நான்கு அகழாய் வுக் குழிகளில் சுமார் 35 செ.மீ. ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்புக் கலவைக் கொண்டு அமைக்கப்பட்ட தரைத் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரைத்தளம் 3 செ.மீ., முதல் 6 செ.மீ., தடிமனுடன் காணப்படுகிறது. தரைத்தளத்தின் கீழே, சுமார் இரண்டு அடி ஆழத்திற்கு ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கருப்பு-சிவப்பு, சிவப்பு பூச்சு மற்றும் சிவப்பு நிறப் பானை ஓடுகள் குவியலாகக் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் துளையிடப்பட்ட பானை ஓடுகள், வண்ணம் தீட்டப் பட்ட பானை ஓடுகள், ரசப் பூச்சு பெற்ற பானை ஓடுகள், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட பானை ஓடுகள் மற்றும் ரௌலட்டட் வகை பானை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இப்பானை ஓடுகளை ஆய்வு செய்ததில், மீன், ஏணி, மற்றும் வடிவியல் சார்ந்த குறியீடுகள் என நூற்றுக்கும் மேற்பட்ட குறியீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொந்தகையில்...
கொந்தகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நான்காம் கட்ட அகழாய்வில் 10x 10 மீ. என்ற அளவில் தோண்டப்பட்ட அகழாய் வுக் குழியில் இதுவரை 17 முதுமக்கள் தாழிகள் மூன்று நிலைகளில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.