இன்ஸ்டாகிராமில் ப்ரொஃபைல் அட்டை அறிமுகம்!
இன்ஸ்டாகிராமில் நண்பர்கள் மற்றும் ஃபாலோயர்களிடம் (Followers) பகிரக்கூடிய ப்ரொஃபைல் அட்டையை (Profile Cards) மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு பக்கங்களைக் கொண்ட இந்த ப்ரொஃபைல் அட்டை, உங்கள் ப்ரொஃபைல் புகைப்படம் (Profile Photo), ஸ்கேன் செய்யக் கூடிய QR Code மற்றும் சுயவிவரங்கள் (Bio) ஆகியவற்றை கொண்டிருக்கும். அட்டையின் Background ஆக படங் களை பயன்படுத்தலாம் அல்லது Background நிறத்தை மாற்றிக்கொள்ள லாம். இதற்கென Edit ஆப்ஷனும் வழங்கப்பட் டுள்ளது. இந்த ப்ரொஃ பைல் அட்டையை, மற்றவர்களுக்கு பகிரக் கூடிய உங்கள் இன்ஸ்டா கிராம் பக்கத்தின் லிங்க்கா கவும் (Profile Link) பெற முடியும். இந்த லிங்கை எஸ்.எம்.எஸ், இ- மெயில் மூலமாகவும், மற்ற தளங்க ளிலும் பகிரும் வகையில் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஜி.பி.எஸ் இல்லாமலும் கூகுள் உங்கள் இருப்பிடத்தை கண்காணிக்கிறது!
ண்காணிக்கிறது என்பதை நம்மில் பலர் அறிந்திருந்தாலும், ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள பல்வேறு ஆப்கள் (Apps) நமது செயல்பாடுகளை கண்காணிக்கின்றன என்பதை நாம் உணர்ந்திருக்கமாட்டோம். இது போன்று நாம் டிராக் (Track) செய்யப்படுவதை தடுக்க, அவற்றை Disable செய்யும் ஆப்ஷ னும் இருக்கிறது. ஆனால், ஜி.பி.எஸ்-யை Disable செய்த பிறகும் கூகுள் உங்கள் இருப்பிடத்தை கண்காணிக்கிறது. கூகுள் எப்படி கண்காணிக்கிறது? ஜி.பி.எஸ் இல்லாவிட்டாலும் வைஃபை பொசிஷனிங் (Wi-Fi positioning), செல் டவர் ட்ரையாங்குலேஷன் (cell tower triangulation), புளூடூத் சிக்னல்கள் (Bluetooth signals), ஐபி முகவரிகள் (IP addresses), பயனர் உள்ளீடு (user input) மற்றும் சென்சார் தரவு (sensor data) போன்ற பல்வேறு முறை களை பயன்படுத்தி கூகுள் உங்கள் இருப்பிடத்தை கண்கா ணிக்கிறது.
ஆண்ட்ராய்டு சாதனத்தில் கூகுள் கண்காணிக்கிறதை நிறுத்துவது எப்படி?
1) உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள Settings-க்கு செல்லவும். 2) பின்னர் Search Box-இல் ‘Activity Controls’ என்று டைப் செய்து, அதனை கிளிக் செய்யவும். 3) அதில் காண்பிக்கும் உங்கள் கூகுள் அக்கவுண்டை (Google Account) தேர்வு செய்யவும். 4) இங்கே, நீங்கள் பல்வேறு செயல்பாடுகளை off அல்லது pause செய்யலாம், auto-delete ஆப்ஷனை தேர்வு செய்யலாம். உங்கள் செயல்பாடுகளை காலவரிசையின் படி நிர்வகிக்கலாம். குறிப்பிட்ட ஆப்கள் உங்கள் இருப்பிடத்தை கண்காணிப்பதை நிறுத்துவது எப்படி? 1) Location Settings-க்கு சென்று ‘App Location Permission’ அல்லது ‘App Permission’-ஐ கிளிக் செய்ய வும். 2) இங்கே உங்கள் இருப்பிடத்தை பயன்படுத்தக்கூடிய ஆப்களின் பட்டியலை காணலாம். ஒவ்வொரு App-ஐயும் தனித்தனியாக கிளிக் செய்து அதில் “Allowed all the time,” “Allow only while using the app,” “Ask every time,” அல்லது “Don’t allow” போன்ற ஆப்ஷன்களில் ஏதா வது ஒன்றை தேவைக்கேற்ப தேர்வு செய்துகொள்ளலாம்.
கூகுள் மேப்ஸ்-இல் உங்கள் இருப்பிட வரலாற்றை நீக்குவது எப்படி?
1) கூகுள் மேப்ஸை (Google Maps) கிளிக் செய்யவும். 2) வலப்புறத்தில் மேலே இருக்கும் உங்கள் கூகுள் கணக்கின் ப்ரொஃபைல் ஐகானை (Profile Icon) கிளிக் செய்யவும். 3) அடுத்ததாக `Your Timeline’ எனும் ஆப்ஷனை தேர்வு செய்து, அதனுள் நுழைந்ததும், மேலே வலப்புறமாக இருக்கும் மூன்று புள்ளிகளை (மெனு) கிளிக் செய்யவும். 4) அங்கே இருக்கும் Settings and Privacy என்பதை தேர்வு செய்து, அதிலுள்ள Delete all Location history என்பதை கிளிக் செய்தால் உங்கள் இருப்பிட வரலாறு விவ ரங்கள் அனைத்தையும் அழித்து விடலாம். 5) மேலும் Automatically delete location history என்பதை தேர்வு செய்தால் அனைத்து விவரங்களும் தானா கவே அழிந்துவிடும்.