tamilnadu

img

புதுக்கோட்டை மாவட்டத்தில் தீவிர தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தீவிர தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

புதுக்கோட்டை, ஜூலை 17-  திருவரங்குளம் கிழக்கு ஒன்றியக்குழு சார்பில், புதன்கிழமை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் 15 புதிய ஆண்டு சந்தாக்கள் சேர்க்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், கி.ஜெயபாலன், டி.சலோமி, ஒன்றியச் செயலாளர் ஆ.குமாரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விராலிமலை ஒன்றியக்குழு சார்பில், வியாழக்கிழமை கட்சியின் மாவட்டச் செயலாளர் தலைமையில் 20 புதிய ஆண்டு சந்தாக்கள் சேர்க்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம். ஒன்றியச் செயலாளர் என்.மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.