tamilnadu

இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரி பாஜகவின் பொதுச் செயலாளர் போல் செயல்படுகிறார்

இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரி பாஜகவின் பொதுச் செயலாளர் போல் செயல்படுகிறார்

ப.மாணிக்கம்தாகூர் எம்.பி. கடும் தாக்கு

விருதுநகர், ஆக.16- இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதி காரி பாஜகவின் பொதுச் செயலாளரை போல  செயல்படுகிறார் என விருதுநகர் மக்களவை  உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் தெரிவித் துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களைச் சந் தித்த அவர் கூறியதாவது: பிரதமர் மோடி சுதந்திர தின உரையில்,  ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகள் தேசநலனுக்  காக சேவை செய்துள்ளது. ஆர்எஸ்எஸ் காரர்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து தேசத்திற்காகவே வாழ்ந்தார்கள் என தெரி வித்துள்ளாரே என்ற கேள்விக்கு, இதைவிட  சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமானப் படுத்த யாராலும் முடியாது. குறிப்பாக, மகா த்மா காந்தி, மாவீரன் பகத்சிங், நேரு, கொடி காத்த குமரன் போன்ற தியாகிகளை இதை  விட யாரும் அவமானப்படுத்த முடியாது.  1925இல் துவங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் உப்புச்  சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு  இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் போன்ற எந்த ஒரு போராட்டத்திலும் பங்கேற் றது இல்லை. ஆர்எஸ்எஸ்காரர்கள், பிரிட்  டிஷ்காரர்களுக்கு அடிமைகளாக இருந்த வர்கள். அப்படிப்பட்ட ஆர்எஸ்எஸ்சை சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் இருந்து  கொண்டு பெரிய சேவை செய்ததாக சொல்  வது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் களை அவமானப்படுத்துவதாகும். பிரதமர் ஆர்எஸ்எஸ்காரரராக இருக்கலாம். நாடு சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் ஆகிவிட்டது. சுதந்திர இந்தியா எப்படி பய ணிக்க வேண்டும் என சொல்ல வேண்டிய நாளில் அதற்காக போராடியவர்களை கௌர விக்க வேண்டிய நாளில், பிரதமர் இவ்வாறு  பேசியது மன்னிக்க முடியாதது. கண்டிக்கத் தக்கது. நியாயமற்றது. ஜி.எஸ்.டி வரியில் மாற்றம் வரும். தீபா வளிப் பரிசாக இருக்கும் என மோடி கூறி யுள்ளாரே, என்ற கேள்விக்கு, ஜிஎஸ்டியை  கொண்டு வந்த போது ஒரே நாடு, ஒரே வரி  எனக் கூறினார். இந்தியாவிலும் பாலும் தேனும் ஓடும் என்றார். இறுதியில் பெரும் பாலானோர் இருக்கின்ற தொழிலையும் மூடும்படி ஆகிவிட்டது. இவருடைய  மார்க் கெட்டிங் முதலில் நல்லாத்தான் இருக்கும். கடைசியில் பினிசிங் சரியிருக்காது. வரும்  தீபாவளி, அம்பானி, அதானிக்கு மட்டுமே நன்றாக இருக்கும். தொடர்ந்து அவர் பொய்  களை கூறி வருவதால் தான் கடந்த  நாடாளு மன்றத் தேர்தலில் பாஜகவிற்கு குறைவான இடங்களை மக்கள் வழங்கினர் என பதில் கூறினார்.   விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், மீனவர்களுக்கு எதிரான கொள்கைக்கு தடுப்புச் சுவராக இருப்பேன் என பிரத மர் கூறியுள்ளது குறித்து, 2020இல் விவசாயி களுக்கு எதிரான கருப்புச் சட்டங்களை கொண்டு வந்தார். இதை எதிர்த்து விவசாயி கள் ஒன்றரை ஆண்டுகள் தில்லி எல்லையில்  வெயில், மழை, குளிர் என பாராமல் போராடி னர். இதில் 739 விவசாயிகள் உயிரிழந்து  தியாகிகளாயினர். உ.பி தேர்தலுக்காக அச் சட்டத்தை நிறுத்தி வைத்தார்.  விவசாயிகள், சிறுகுறு விவசாயிகளைப் பற்றி எப்போதும் அவர் கவலைப்படுவதில்லை. உலக பணக்  காரர் வரிசையில் 20 ஆவது இடத்தில் உள்ள  அதானியை மேலும் முன்னேற்றவே  பாடுபடு கிறார் என தெரிவித்தார்.   பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்கா ளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதே என்ற கேள்விக்கு, ஆதார், ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வாக்களிக்க  மிக முக்கியமானது. ஆனால், பீகாரில் இதை  ஏற்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. மாறாக, பாஸ்போர்ட், பான் கார்டு, தந்தை யின் பிறப்புச் சான்று தர வேண்டும் என கூறு கிறது. இதை ஏழை, எளிய மக்கள் தேடிப்  போய் வாங்க முடியுமா? எனவே, தகுதி யுடைய  65 லட்சம் பேர் வாக்காளர்களாக இல்லை. இதன் காரணமாகவே நாடாளுமன்றம் 14 நாட்கள் முடங்கியது. சட்ட விரோதமாக ஏழை மக்களின் வாக்குகள் நீக்கப்பட்டது குறித்து விவாதிக்க வேண்டும்? என இந்தியா  கூட்டணியினர் கேட்டோம். ஒரு நிமிடம் கூட  ஒதுக்கவில்லை. தற்போது ஆதாரை ஏற்க  வேண்டுமென உச்ச நீதிமன்றமே கூறிவிட் டது.   தேர்தல் ஆணையம் பாஜகவின் கைக் கூலியைப் போல் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது. குறிப்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி பாஜகவின் பொதுச் செய லாளரைப் போல் செயல்படுகிறார் என காட்ட மாக பதிலளித்தார். மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  இந்தியா முழுவதும் 48 தொகுதிகளில் திருட்டுத்தனம் செய்து பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஓடும் பேருந்தில் பயணிகளி டம் பிக் பாக்கெட் அடிப்பதைப் போல் வாக்கு களைத் திருடியுள்ளனர். கடந்த இரு தேர்த லின் வாக்காளர் பட்டியல்களை டிஜிட்ட லைஸ் செய்து முறைகேடுகளை கண்டு பிடித்து  நாட்டு மக்களிடம் அம்பலப்படுத்து வோம் என்றார்.     வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேர்  தல் ஆணையம்  வாக்காளர் பட்டியல் தயா ரிப்பது குறித்து இந்தியா கூட்டணி கவனம்  செலுத்துமா என்ற கேள்விக்கு, தமிழக தேர்தலில் பாஜக  என்ன முறைகேடு செய்யப்  போகிறார்கள் எனத் தெரியவில்லை. ஒவ்  வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான  முறைகேட்டை செய்துள்ளனர். ஆந்திராவில் ஒரு பூத்தில் 720 வாக்கு கள் செலுத்தப்பட்டிருந்தால் இ.வி.எம்  இயந்திரத்தில் 970 வாக்குகள் உள்ளது. இதே போல் 60 சதவிகித பூத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஜெகன் மோகன்ரெட்டி புகார் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் 50 சதவிகித பூத்தில் இதே போல் வாக்குகள் கூடியுள்ளன என நவீன் பட்நாயக்   கூறுகிறார். பெங்களூரில் ஒரு சட்ட மன்ற தொகுதியில் ஒரு லட்சம் போலி வாக்காளர்களை சேர்த்துள்ளனர். இப்படி  விதவிதமாக, கலர், கலராக படம் ஓட்டியுள்ள னர் பாஜகவினர் என தெரிவித்தார்.