கார்த்தி வித்யாலயா பள்ளியில் சுதந்திர தின மாறுவேட போட்டி
கும்பகோணம், ஆக. 12- 79 ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில், மாணவ மாணவியர்களுக்கு மாறுவேட போட்டி மற்றும் ஓவிய போட்டி நடைபெற்றது. மாறுவேடப் போட்டியில், குழந்தைகள் பாரதியார், வேலு நாச்சியார், ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், மகாத்மா காந்தி போன்ற பல்வேறு வேடங்களில் தேச தலைவர்களின் வாக்கியங்களை மாணவர்கள் கூறினர். மேலும், 3 ஆவது, 4 ஆவது, 5 ஆவது வகுப்பு மாணவ, மாணவியர்கள் தேசிய கொடியினையும், தேசிய பறவை மயில், தேசிய விலங்கான புலி ஆகியவற்றை வரைந்து வண்ணம் தீட்டினர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பாராட்டு சான்றிதழினை பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கி வாழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.