அன்னை மீனாட்சி நாச்சியார் பள்ளியில் சுதந்திர தின விழா'
அறந்தாங்கி, ஆக. 17- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், சுதந்திர தின விழா, பள்ளி தாளாளர் டி.என்.எஸ். நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. தேசியக் கொடியை நகர்மன்றத் தலைவர் இரா. ஆனந்த் ஏற்றினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் துளசிராமன், விஷ்வ மூர்த்தி, உதயசூர்யா மற்றும் ஐயப்பன், ரவி கணேஷ், சாமி சத்தியமூர்த்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, பள்ளி ஒருங்கிணைப்பாளர் காமராஜ் வரவேற்று பேசினார். பள்ளி முதல்வர் யோகராஜா நன்றி கூறினார்.