பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் வாகனங்கள் தொடங்கி வைப்பு
கடலூர், ஜூலை 1- கடலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் பணியை இயந்திரம் மூலம் செய்வதற்கு நான்கு சுத்தம் செய்யும் வாகனங்கள் மாநக ராட்சி மேயர் சுந்தரி ராஜாவால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) தொடங்கி வைக்கப்பட்டது. கடலூர் மாநகராட்சியில் நான்கு மண்ட லங்கள் உள்ளன. பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை அடைப்பு எடுப்பதற்கு மனிதர்களை பயன்படுத்துவதற்கு நீதி மன்றங்கள் ஏற்கனவே தடை விதித்துள்ளன. இதனால் மேன் ஹோலில் எந்திரத்தின் மூலம் அடைப்பு எடுப்பதற்காக தலா ரூ.15 லட்சம் செலவில் நான்கு சுத்தம் செய்யும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் அனு, மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா செந்தில் முருகன், மாநகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.