tamilnadu

img

விழுப்புரம் மாவட்டத்தில் 517 தீக்கதிர் சந்தா அளிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் தீக்கதிர் நாளிதழ் தீவிர சந்தா சேர்க்கும் இயக்கம் கடந்த ஜூலை 1 முதல் 10 வரை நடைபெற்றது.  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி  செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) மாவட்டச் செயலாளர்  என்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. 517 தீக்கதிர் சந்தாவுக்கான தொகை ரூ.7 லட்சத்து 89 ஆயிரத்து 900ஐ மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் வழங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், எஸ்.முத்துகுமரன்,  எஸ்.கீதா, ஏ.சங்கரன், ஆர்.மூர்த்தி, எஸ்.வேல்மாறன்,சே.அறிவழகன், ஆர்.டி.முருகன் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.