tamilnadu

img

தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய தென் மாவட்டங்கள்....

தென்மாவட்டங்களில் புதிய தொழில்களை தொடங்க தமிழக அரசு முன்வராததால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஆண்டுதோறும் பொறியில், பாலிடெக்னிக், ஐடிஐ மற்றும் கலைஅறிவியல் கல்லூரிகளில் படிப்பை முடித்து ஆயிரக்கணக்கான இளைஞர் கள் வெளியேவருகின்றனர். ஆனால் வேலை வாய்ப்போ முற்றிலுமாக இல்லை.பொறியியல் படித்தவர்கள் உணவு விநியோகம் செய்பவர்களாகவும், ஜவுளிக் கடை பணியாளர்களாகவும் மாறி வருகின்றனர்.

மதுரையில் 375 ஏக்கர் பரப்பளவிலான ஐ,டி.பூங்காவும் செயல்படவில்லை. வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்வோர் அங்கு கொத்தடிமைகளாக மாற்றப்படுகின்றனர். பலர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து மீண்டு வருகிறார்கள்.தமிழக அரசோ அரசை நம்பாதீர்கள்... தனியார நம்புங்கள் எனக்கூறிதனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துகிறது. இதன் மூலம் வேலைக்குச் செல்வோர் எண்ணிக்கை பத்து சதவீதத்தை தாண்டியிருந்தால் அது பெரியவிஷயம். இந்தத் தனியார் நிறுவனங்களில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது.

மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் புதிய தொழில்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை தேய்கிறது. பாரம்பரியதொழில்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் திட்டமிட்டு கபளீகரம் செய்துவருகின்றன.உதாரணமாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே 375 ஏக்கரில் உருவான பிரமாண்ட ஐ.டி. பூங்கா ஒன்பது ஆண்டுகளாக திறக்கப்படாமல் முடங்கி கிடக்கிறது. மதுரை சுற்றுச்சாலையில் பாண்டிகோவில் அருகிலுள்ள ஐ.டி. பூங்காவில் 60 சதவீதத்திற்கும் மேலான நிறுவனங்கள் பூட்டப்பட்டுவிட்டது. கம்பெனிகள் வராமல் அரைகுறையாக உள்ளது. தென்மாவட்டங்களை அரசு திட்டமிட்டு புறக்கணித்துவருகிறது. 

தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் மொத்தம் 73,12,390. 56 வயதுக்கு மேற்பட்டோர்- 6,687 மண்டல அளவில் ஒப்பிடுகையில் தென்மாவட்டங்களில் தான் வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. 73 லட்சம் பேரில் 15 லட்சம் பேருக்கு மட்டுமேதனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது என தமிழக அரசே ஒப்புக்கொண்டுள்ளது.தென்மாவட்டங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்பட்ட சேதுசமுத்திரத் திட்டம், குளச்சல் துறைமுக திட்டங்களை பாஜக அரசு முடக்கிவிட்டது. இது குறித்து எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு எதிர்ப்பை தங்களது முணுமுணுப்பின் மூலம் கூட தெரிவிக்கத் தயாரில்லை. குறைந்தபட்சம் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றினால் சில நூறு பேர்களுக்காவது நேரிடயாகவோ, மறைமுகமாகவோ வேலை கிடைக்கும்.

 தமிழக அரசு 2015?ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்திரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு 98 ஒப்பந்தங்கள் கையெழுத்திட் டது. இன்றுவரை அதில் மூன்று ஒப்பந்தங்கள் மட்டுமே செயல்பாட்டிற்கு வந்துள்ளது.இதில் தென் மாவட்டங்கள் புறக்கணிக் கப்பட்டன.ஜனவரியில் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு 94 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில்ஒன்றிரண்டாவது தென் மாவட்டங்களுக்கு வருமா என்பது கேள்வியாக உள்ளது.

==ஜெ.பொன்மாறன்===

;