tamilnadu

img

முறைகேடு கண்டறியப்பட்டால் எஸ்ஐஆரை ரத்து செய்வோம்! தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

முறைகேடு கண்டறியப்பட்டால் எஸ்ஐஆரை ரத்து செய்வோம்! தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

புதுதில்லி, செப். 15 - தேர்தல் ஆணையம் பீகா ரில் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் (SIR)ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கை கண்டறியப்பட்டால், ஒட்டு மொத்த செயல்முறையை யும் ரத்து செய்வோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த தீர்ப்பானது பீகா ருக்கு மட்டுமானதாக அல்லா மல், இந்தியா முழுவதற்கு மானதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு, செப்டம்பர் 8 அன்று  விசாரணைக்கு வந்தபோது, வாக்காளர் பட்டியலில் பெய ரை உறுதிப்படுத்தும் ஆவ ணங்களில் 12-ஆவது ஆவணமாக ஆதாரையும் சேர்க்க நீதிபதிகள் சூரிய காந்த், ஜோய்மால்ய பக்சி அமர்வு உத்தரவிட்டது. ஆதார், இந்தியக் குடியுரி மையை நிறுவ முடியாது என்றாலும், அது ஒருவரது அடையாளத்தையும் வசிப்பி டத்தையும் உறுதிப்படுத்தும் வகையிலான ஆவணம் என்றும் வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில், திங்க ளன்று வழக்கு மீண்டும் விசா ரணைக்கு வந்தது. அப் போது, “பீகார் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக துண்டு துண்டாக கருத்துகளைத் தெரிவிக்க விரும்பவில்லை” என்ற நீதிபதிகள், “ சிறப்பு தீவிர திருத்தத்தின் செல்லு படி தன்மை குறித்த இறுதி விசாரணை அக்டோபர் 7 அன்று நடைபெறும்” என்று அறிவித்தனர். “இறுதி வாக்காளர் பட்டி யல் அக்டோபர் 1 அன்று  வெளியிடப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலை யில், உச்சநீதிமன்றம் அதை ஆய்வு செய்வது பெரிய விஷ யமல்ல; திருத்தம் சட்ட விரோதமாக நடைபெற்றி ருந்தால் நிச்சயம் அது ரத்து செய்யப்படும். தேர்தல் ஆணையம் அரசியலமை ப்பு வரம்புகளுக்குள் செயல் படும் என்று நீதிமன்றம் கரு துகிறது” என தெரிவித்தனர்.  மேலும், இறுதித் தீர்ப்பா னது பீகாருக்கு மட்டுமான தாக அல்லாமல், இந்தியா முழு வதற்குமானதாக இருக்கும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.