tamilnadu

மகனின் சாதி மறுப்புத் திருமணத்தை ஏற்றுக் கொண்டதால் ஆத்திரம் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயன்ற கணவன்

மகனின் சாதி மறுப்புத் திருமணத்தை ஏற்றுக் கொண்டதால் ஆத்திரம் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயன்ற கணவன்

நடவடிக்கை எடுக்க சிபிஎம்,  தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஆக.3 - மகனின் சாதி மறுப்புத் திருமணத்தை ஏற்றுக் கொண்ட மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி  கொளுத்தி கொலை செய்ய முயன்ற கொடூரச்  சம்பவம் புதுக்கோட்டை அருகே அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அருகே முள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மெய்யர்-செல்லம்மாள் தம்பதியரின் மகன்  அரங்குளவன். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இவரும், புதுக்கோட்டை திருவப்பூர் வ.உ.சி நகரைச் சேர்ந்த காயத்ரியும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காத லித்து திருமணம் செய்து கொண்டனர். காயத்ரி  பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால்,  அரங்குளவன் குடும்பத்தினரும், ஊர்க்காரர்களும்  இத்திருமணத்தை ஏற்றுக் கொள்வில்லை. இதனால், இருவரும் காரைக்குடியில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், இரண்டு  வருடம் ஆகிவிட்டதால் பழைய பகையை மறந்து  தங்களை ஏற்றுக் கொள்வார்கள் என நம்பி, கடந்த ஜூன் மாதம் இருவரும் அய்யம்பட்டிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு அரங்குளவனின் அப்பா, சித்தப்பா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இதற்கு உடந்தையாக ஊர்காரர் களும் இருந்துள்ளனர். ஏமாற்றத்துடன் மீண்டும் அரங்குளவனும் காயத்ரியும் காரைக்குடிகே சென்றுவிட்டனர். இந்நிலையில், அரங்குளவனின் தாயார் செல்லம் மாள் மகன், மருமகளுடன் வந்து தங்கியுள்ளார்.  இதனைத் தொடர்ந்து மெய்யர், தனது மகனை  செல்பேசியில் அழைத்து “நான் ஊர் காரர்களி டம் பேசிவிட்டேன். உங்களை அழைத்து வர  அனுமதி கொடுத்து விட்டனர்” என்று தந்திர மாகப் பேசி ஊருக்கு வரவழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 30 அன்று  மகனும், மருமகளும் வீட்டில் இல்லாத நேரத்தில்  மகனின் சாதி மறுப்புத் திருமணத்தை ஏற்றுக் கொண்டதால் ஆத்திரமடைந்த மெய்யர், மனைவி  செல்லம்மாள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி  கொலை செய்ய முயன்றுள்ளார். இதனால்  உயி ருக்கு ஆபத்தான நிலையில், புதுக்கோட்டை அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செல்லம் மாள் சிகிச்சை பெற்று வருகிறார். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட அரங்குளவனும், காயத்ரியும் செய்வது அறியாது திகைத்து நிற்கின்றனர். மருத்துவமனையில் உள்ள செல்லம்மாளிடம் வாக்குமூலம் பெற்று திருக்கோகர்ணம் போலீசார்  மெய்யர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்துள்ளனர். மெய்யருக்கும் கையில் தீ காயம் உள்ளதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்லம்மாள், சாதி மறுப்புத் திருமணம் செய்து  கொண்ட அரங்குளவன் - காயத்ரி ஆகியோரை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொருளாளர் இ.மோகனா, சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.சங்கர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி  மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தலைவர்  சி.அன்புமணவாளன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மகனின் சாதி மறுப்புத் திருமணத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்துக்காக மனை வியை கொலை வெறியுடன் மண்ணெண்ணெய் ஊற்றி கொல்ல முயன்ற மெய்யர் மட்டுமல்லாது,  அவரது செயலுக்கு உடந்தையாகவும், தூண்டுத லாக இருந்தவர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டும் என சிபிஎம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.