tamilnadu

img

தமிழகத்தில் இன்று மனித சங்கிலி

மகாத்மா காந்தி தியாக நாளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பிரம்மாண்ட இயக்கம்

40 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்

சென்னை, ஜன. 29- குடியுரிமை திருத்தச்சட்டம்,  தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள்  தொகை பதிவேடு ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை; இதற்கெதிராக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் ஜனவரி 30 (இன்று) நடைபெறும் மனித சங்கிலி இயக்கத்தில் தமிழகம் முழுவதும்  40 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகிகள் தெரி வித்துள்ளனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார், தாவுத்மியாக்கான் ஆகி யோர் சென்னையில் புதனன்று (ஜன.29) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குடியுரிமை திருத்தச்  சட்டம்   நமது அரசியல் சாசனத்தின் அடிப்படைத் தன்மை க்கு விரோதமானது. வரும்  ஏப்ரல் மாதம்  முதல் “தேசிய மக்கள்தொகை பதிவேடு” பணி துவங்கப்போகிறது. இது பத்து ஆண்டு களுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு போல் அல்ல என்பதை விளக்கி கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று சென்னையில் ஒரு லட்சம் விழிப்புணர்வு துண்டு பிரசுரமும், மாநிலம் முழுவதும் 10 லட்சம் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. மக்களை மத ரீதியாக பிளக்கும் மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து, மதநல்லி ணக்கத்தை பாதுகாப்பதற்காக உயிர் நீத்த தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30 மாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை ஒரு மணி நேரம் மாநிலம் முழுவதும் மனித சங்கிலி இயக்கம் நடைபெறுகிறது. சென்னையில் திருவொற்றியூர் தேரடி முதல் தாம்பரம் வரை 37.1 கி.லோ மீட்டர் தூரத்திற்கு மனித சங்கிலி நடைபெற உள் ளது. இதில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், முக்குலத்தோர் புலிப் படை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், மாணவர், வாலி பர், மாதர் அமைப்புகளைச் சேர்ந்தவர் களும் கலந்து கொள்கின்றனர். மக்கள் ஒற்று மையை பாதுகாக்கும் இந்த இயக்கத்திற்கு பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

பங்கேற்கும் தலைவர்கள்

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் அண்ணாசாலை சாந்தி தியேட்டர் அருகிலும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா  அண்ணா சிலை வாலாஜா சாலை சந்திப்பி லும், பத்திரிகையாளர் என்.ராம் பெரியார் சிலை அருகிலும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி சைதை பனகல் மாளிகை அருகிலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ் பல்லாவரத்திலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் எம்.பி., தாம் பரத்திலும், எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் பிராட்வே மெட்ரோ ரயில் நிலையம் அருகிலும், தேசிய தவ்ஹீத் ஜமாத் தலை வர் பாக்கர் குறளகம் அருகிலும், காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உ. பலராமன் ராயபுரம் பாண்டியன் தியேட்டர் அருகிலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் எஸ்.கே.மகேந்திரன் தண்டையார் பேட்டை மணிக்கூண்டு அருகிலும், இமாம் மன்சூர் ஆசிப் மஜீத் கூட்டமைப்பு தலைவர் அண்ணாசாலை எல்ஐசி அருகிலும் பங்கேற்கிறார்கள்.

முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி அண்ணா சாலை டிவிஎஸ் அருகிலும், சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அண்ணா சாலை காமராஜர் அரங்கம் அரு கிலும், இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்பு தலைவர் பாத்திமா லத்தீப் அண்ணா சாலை  எஸ்ஐஈடி கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகிலும், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது அண்ணா சாலை நந்தனம் அருகிலும் கலந்து கொள்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் விழுப்புரத் திலும், ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் உ.வாசுகி தூத்துக்குடியிலும், தமிழக மக்கள் மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் பேரா.அருணன் மதுரையிலும், மேடையின் புர வலர் கல்வியாளர் தாவூத் மியாகான் ஈரோட்டி லும்,  மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செய லாளர் அப்துல்சமது தேனியிலும் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இச்சந்திப்பின் போது உ.பலராமன் (காங்கிரஸ்), மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல்சமது, வன்னி அரசு (விசிக), ஊடகவியலாளர் அ.குமரேசன், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ராமகிருஷ்ணன், குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

;