tamilnadu

img

உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் மறைவு

உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் மறைவு

முதலமைச்சர் நேரில் அஞ்சலி; அரசு சார்பில் இறுதி மரியாதை

சென்னை, மே 7- மாரடைப்பால் உயிரிழந்த  உயர் நீதிமன்ற நீதிபதி ஜெ. சத்யநாராயண பிரசாத்துக்கு தமிழக அரசின் சார்பில்  காவல்துறை அணிவகுப்பு டன் இறுதி மரியாதை செலுத் தப்பட்டு அவரது உடல் பெசன்ட்  நகர் மின் மயானத்தில் தக னம் செய்யப்பட்டது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகளுக் கான குடியிருப்பில் வசித்து வந்த  சத்யநாராயண பிர சாத்திற்கு செவ்வாய்க்கிழமை (மே 6) இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. குடும்பத் தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

முதலமைச்சர் அஞ்சலி

இதையடுத்து அவருடைய உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. இறந்த நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி கே. ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி கள் ஆர்.சுப்பிரமணியன், எம்.எஸ்.ரமேஷ், எம்.வேல்முரு கன், சி.வி.கார்த்திகேயன், ஆர்.எம்.டி.டீக்காராமன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உள்ளிட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி தலைமையில், உயர்  நீதிமன்ற நீதித்துறை அதிகாரி கள், மாவட்ட நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், நீதி மன்ற ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர். திமுக எம்.பி பி.வில்சன், தமிழக அரசின் மாநில தலைமை குற்றவியல் வழக் கறிஞர் அசன் முகமது ஜின்னா, கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் உள்ளிட்ட அரசு வழக்கறி ஞர்கள், தமிழ்நாடு புதுச்சேரி  பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை  உயர்நீதிமன்ற வழக்கறி ஞர்கள் சங்கத் தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன், செய லாளர் ஆர்.கிருஷ்ணகுமார், மெட்ராஸ் பார் அசோசியே ஷன் சங்க நிர்வாகிகள் என  பலரும் அஞ்சலி செலுத்தினர். பிறகு, அவரது உடல் புதன் கிழமை, அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தமிழக அரசு சார்பில்  போலீசாரின் அணி வகுப்புடன் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது. மரணமடைந்த நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் 1969 ஆம் ஆண்டு மார்ச் 15  அன்று தஞ்சாவூரில் பிறந் தார். அவரது பூர்வீகம் அரக்கோணம் அருகே உள்ள  மின்னல் கிராமம். வேலூரில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. வரலாறும், தில்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறும் முடித்தார்.