பக்க பலமாக இருப்போம்: வைகோ
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் அதன் பிறகு, செ2ய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, திமுக - மதிமுக கூட்டணியில் சுணக்கம் ஏற்பட்டி ருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார். கூட்டணி ஆட்சி என்பது எங்களின் நோக்கம் அல்ல. கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எங்களின் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.
என்னை கட்சியிலிருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரமில்லை பாமக எம்எல்ஏ அருள் பதிலடி
சென்னை: பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாமக செயல் தலைவர் அன்புமணி ராம தாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கை களுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இரா. அருளுக்கு அறி வுறுத்தப்பட்டது. ஆனால் அதை அவர் மதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாமக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஜூலை 2 முதல் இரா. அருள் நீக்கப் படுகிறார் என்று அறிவித்துள்ளார். அருள் எம்எல்ஏ பதிலடி இதனிடையே, தன்னைக் கட்சியிலிருந்து நீக்க அன்பு மணிக்கு அதிகாரம் இல்லை என்றும், ராமதாஸூக்கு மட்டுமே அந்த அதிகாரம் இருப்பதாகவும் பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
கோவையில் தங்க நகைப் பூங்காவுக்கு டெண்டர்
சென்னை: கோவை மாவட்டம் குறிச்சியில், 2.46 ஏக்கரில், 8.5 லட்சம் சதுர அடியில் தங்க நகைத் தொழிற் பூங்கா அமைக்கப்பட உள்ளது. தரைத்தளம் மற்றும் 5 தளங்கள் கொண்ட கட்டடமாக அமையவுள்ளது தங்க நகை பூங்கா. இந்த தங்க நகை பூங்காவின் கட்டுமான பணிகளை ரூ.45 கோடியில் மேற்கொள்ள சிட்கோ நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.
ஒரே நாளில் தொழில் உரிமம்
சென்னை: நகர்ப்புறங்களில் 500 சதுர அடி வரை உள்ள கடைகளுக்கு சுய சான்று அடிப்படையில் ஒரே நாளில் தொழில் உரிமம் வழங்கும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், உணவு விற்பனைக் கடைகள் தவிர்த்து மற்ற கடைகளுக்கு இது பொருந்தும் என அறிவித்துள்ளது.
போலீசார் பணியிட மாற்றம்
ராணிப்பேட்டை: சோளிங்கர் அருகே பாமக நிர்வாகி சக்கரவர்த்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தனிப்பிரிவு தலைமைக் காவலர் உட்பட 10 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை: மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூலை 3, 4 தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளி லும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 5 முதல் 8 வரை தமி ழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 36-37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்ப நிலை 29 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
போக்குவரத்து அதிகாரி திடீர் நடவடிக்கை
சென்னை: மாண வர்கள் படிக்கட்டில் பய ணம் செய்த பேருந்தை 3 நாள்கள் நிறுத்தி வைக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டு உள்ளார். மேலும் ஓட்டு நர், நடத்துநரை புத்தாக்க பயிற்சிப் பள்ளிக்கு அனுப்பவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பரப்பிய வதந்தி: அரசு விளக்கம்!
சென்னை, ஜூலை 2 - ஜம்மு - காஷ்மீரில், சமீபத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியவர்களை விமர்சித்ததற்காக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டதாக தெரி விக்கப்பட்டது பொய் என்று தெரிவித்து தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித் துள்ளது. “பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தி யவர்கள் குறித்து விமர்சித்ததற்காக தமிழ்நாடு பாஜக நிர்வாகி பிரவீன் ராஜ் கைது செய்யப் பட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். இது முற்றிலும் தவறான தகவல். கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் உள்ள திருவாலங் காடு பகுதியில் ரயில் தண்டவாளத்தில் போல்ட் கழற்றப்பட்ட சம்பவத்தை, தமிழர்களை கொல்லச் சதி என்றும், இஸ்லாமியர்கள் செய்த தாகப் பொருள்படும்படி பிரவீன் ராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால், ரயில் தண்டவாளத்தில் போல்ட் கழற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக உத்தரகண்ட் சாமியார் ஓம் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இப்படி சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பகிர்வதன் மூலம் பொதுமக்களி டையே பதற்றத்தை உருவாக்கி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பதிவிட்டதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், பஹல்காமில் தீவிரவாதத் தாக்கு தல் நடத்தியவர்களை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டதாகத் தவறாகப் பரப்பி வருகின்ற னர்” என்று தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் தெரிவித்துள்ளது.
தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்பது அத்துமீறல்! ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்