சென்னை, டிச. 30 - சென்னையில் வியாழ னன்று (டிச.30) பிற்பகல் முதல் பெய்த தொடர் கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை நகரில் மெரினா, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப் பேட்டை, எழும்பூர், புரசை வாக்கம், விருகம்பாக்கம், வடபழனி, பெருங்குடி, சென்ட்ரல், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அலுவல கங்களுக்கு சென்றவர்கள் திரும்பி வரமுடியாமல் அவதிப்பட்டனர். குறிப்பாக, ராயப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில வெள்ளம் தேங்கி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் வெளிச்சத்தை உமிழ்ந்தபடி சென்றன. தாழ்வான பகுதி களில் வெள்ளம் வீட்டிற்குள் புகுந்தது. சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.