மிகச் சிறந்த தொழிற்சங்கவாதியாக, கட்சித் தலைவராக, வழிகாட்டியாக இருந்தவர். பதவி களை கூட பொறுப்புகளாக உணர்ந்தவர். கம்யூ னிஸ்ட்களின் அடிப்படை கோட்பாட்டிற்கு இலக்கண மாகவும், எளிமை, உண்மை, நேர்மை, மனிதாபி மானிஎன்ற நடைமுறைக்கு உதாரணமாக இருந்த வர். சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் எந்த ஆடம்பரமற்று, மேற்படி இலட்சியத்தை அடிப் படையாக கொண்டு செயல்பட்டவர். பிரச்சனைகளை களத்தில் நின்று சந்தித்தவர். வாழ்நாளில் பெரும் பாலும் மனித குலத்திற்காக சேவை செய்வதற்கு ஏற்ற வகையில் ஒரு சூழலை நாம் ஏற்பாடு செய்து கொண்டால் எத்தனை சுமைகளும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது - பணிய வைத்துவிட முடியாது என்ற மார்க்சின் வார்த்தைக்கு வடிவம் கொடுத்து சம காலத்தில் வாழ்ந்தவர் தோழர் கே.தங்கவேல். அவர் விட்டு சென்ற பணியை தொடருவோம்.
தோழர் கே.தங்கவேல் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் - செப் 13