tamilnadu

உணவு தானியங்கள் எத்தனால் உற்பத்திக்கு திருப்பி விடப்பட்டிருக்கிறதா?

புதுதில்லி, டிச.4- மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவு தானியங்கள் அவர்களுக்கு வழங்கப்படாமல் எத்தனால் உற்பத்திக்காக, திருப்பி விடப்பட்டிருக்கிறதா என்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்க ளவை குழுத்தலைவர் பி.ஆர். நடராஜன் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரு கிறது. மக்களவையில் புதன் அன்று கேள்வி நேரத்தின் போது பி.ஆர். நடராஜன், மக்களுக்கு வழங்கப் பட வேண்டிய உணவு தானியங்கள் அவர்களுக்கு வழங்கப்படாமல் எத்தனால் உற்பத்திக்காக, திருப்பிவிடப்பட்டிருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துமூலம் பதில ளித்த ஒன்றிய நுகர்வோர் விவ காரம், உணவு மற்றும் பொது விநி யோகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியதாவது: விவசாயிகளின் வருமா னத்தை அதிகரிக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்காகவும், மாசு கட்டுப் பாட்டிற்காகவும் எத்தனால் மற்றும் பெட்ரோல் கலவை திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்கீழ் கரும்புச்சாறு, சர்க்கரை சத்துள்ள கிழங்குகள், சோளம், மரவள்ளிக்  கிழங்கு, உடைத்த அரிசி மற்றும் சேதமடைந்த உணவுதானியங்க ளிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.  மேலும், 2020ஆம் ஆண்டு தேசிய உயிர் எரிபொருள் ஒருங்கி ணைப்பு கமிட்டி பல்வேறு தரப் பினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதை அடுத்து, நாட்டிலுள்ள அரிசி மற்றும் சோளத்தின் கிடைப்பளவுகளைக் கருத்தில் கொண்டு, எத்தனால் மற்றும் பெட்ரோல் கலவை திட்டத்தின் கீழ், இந்திய உணவு கழகத்திடம் உள்ள, அரிசியிலிருந்தும் சோளத்திலி ருந்தும் எத்தனால் உற்பத்தி செய்ய வும், பெட்ரோலுடனான கலவைக் கும் பரிந்துரை செய்துள்ளது என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.    (ந.நி.)

;