திருச்சிராப்பள்ளி, ஜூலை 12- தீக்கதிர் திருச்சி பதிப்பிற்குட் பட்ட மாவட்டங்களில் சேகரிக்கப் பட்ட 4499 தீக்கதிர் சந்தாக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். ஜூலை 1 முதல் 10 வரை மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடை பெற்றது. அதன் ஒருபகுதியாக தீக்கதிர் திருச்சி பதிப்பிற்கு உட்பட்ட மாவட்டங்களில் நடந்த தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் 4499 சந்தாக்கள் சேகரிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தீக்கதிர் சந்தா வழங்கும் விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதன்கிழமை திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகில் நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர். ராஜா தலைமை வகித்தார். மேற்கு பகுதி செயலாளர் எம்.ஐ.ரபீக்அஹ மது வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, தீக்கதிர் முதன்மை பொதுமேலாளர் என். பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் கள் எஸ்.ஸ்ரீதர், ஐ.வி.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி.நாகைமாலி, எம்.சின்னதுரை ஆகி யோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 4499 சந்தா விற்கான தொகை ரூ.45 லட்சத்து 15 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்டச் செய லாளர்கள் நாகை-வி.மாரிமுத்து, திருச்சி புறநகர்-எம்.ஜெயசீலன், புதுக்கோட்டை - எஸ்.கவிவர்மன், தஞ்சை - சின்னை.பாண்டியன், திரு வாரூர் - ஜி.சுந்தரமூர்த்தி, மயிலாடு துறை - பி.சீனிவாசன், கரூர் - எம்.ஜோதிபாசு, அரியலூர் - ஆர்.இளங் கோவன், பெரம்பலூர் - பி.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தீக்கதிர் நிர்வாக மேலாளர் ஜெ.ஜெயபால் நன்றி கூறினார்.