வழிபறி வழக்கில் கையாடல்: காவல் ஆய்வாளர் பணி இடை நீக்கம்
கடலூர், செப்.24- பணம் கையாடல், மணல் கடத்தலுக்கும் உடந்தையாக இருந்ததாக ராமநத்தம் காவல் ஆய்வாளாரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம், கோரக்காவடி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி அம்மணி. இவர், அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அம்மணி அணிந்திருந்த மூன்று சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை வைத்து பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை கைது செய்தனர். மேலும், நகை மற்றும் ரூ. 75 ஆயிரம் பணம் ஆகியவற்றை ராமநத்தம் காவல் ஆய்வாளர் பிருந்தா பறிமுதல் செய்தார். ஆனால், பணத்தை கணக்கு காட்டாமல் மறைத்துள்ளார். இந்த தகவல் காவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, பிருந்தாவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தனர். மேலும் அவர் மீது மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது போன்ற அடுக்கடுக்கான புகார் இருப்பதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பரிந்துரைப் பேரில் பிருந்தாவை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உமா உத்தரவிட்டுள்ளார்.
தாம்பரம் மாநகராட்சியில் கடைகள் அகற்றம்
சென்னை, செப்.24- தாம்பரம் மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிக ளில் சாலையோர ஆக்கிர மிப்பு கடைகளால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், மாநக ராட்சி அதிகாரிகள் ஆக்கிர மிப்பு அகற்றும் பணிகளை திங்களன்று மேற்கொண்ட னர். குரோம்பேட்டை சிஎல்சி ஒர்க்ஸ் சாலையில் போலீசார் பாதுகாப்போடு பொக்லைன் இயந்திரம் மூலம் இரவோடு இரவாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதால் அதிகாரிக ளுக்கும் கடை உரிமை யாளர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தாம்பரம் ராஜாஜி சாலையிலும் இதேபோன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டபோது, கடை உரிமை யாளர்கள் மாநகர மன்ற உறுப்பினர் தாம்பரம் எம்.யாகூப்பிடம் முறையிட்ட னர். இதைக் கண்டித்து அவர் மாநகராட்சி அலுவ லக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் 30க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் அமர்ந்து போராட்டம் நடத்தி னர். பின்னர் மாநகராட்சி அதி காரிகள் மற்றும் போலீசார் பொருட்களை திரும்பத் தருவதாக உறுதியளித்து போராட்டத்தை கலைய செய்தனர்.
கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு
வேலூர், செப். 24- வேலூர் மாவட்டம், குடி யாத்தத்தில் வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவ காரம் தொடர்பாக 6 தனிப் படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலை யில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் சிறு வனை போலீசார் மீட்ட னர்.கடத்திய கும்பல் சிறு வனை அங்கு விட்டு சென்றுள்ளனர்.