tamilnadu

அடுத்த ஆண்டு கோவிட்-19ஐ முடிவுக்கு கொணர வேண்டும்

2021ஆம் ஆண்டு கோவிட்-19 நோய் பாதிப்புடன் குறைந்தது 33 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். இந்நோய் பரவலால் மக்களின் இயல்பான வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. ஏன் இதர நோய்களின் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன என்று உலகச் சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் டெட்ரோஸ் ஞாயிறன்று ஜெனிவாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு கோவிட்-19 நோய் பரவலை முடிவுக்கு வர வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய அளவிலான சீற்றம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அனைத்து நாடுகளும் நிதி ஒதுக்கீடு செய்து, தொடரவல்ல வளர்ச்சி இலக்கை விரைவாக நனவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

;