tamilnadu

img

மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.10,997 கோடி கடன்: அரசு பெருமிதம்

மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.10,997 கோடி கடன்: அரசு பெருமிதம்

சென்னை, ஜூலை 20 - மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு  ரூ.10,997 கோடி கடன் வழங்கப்பட்டுள் ளதாக அரசு தெரிவித்துள்ளது.  இது குறித்து தமிழ்நாடு அரசு வெளி யிட்டிருக்கும் குறிப்பில் தெரிவித்தி ருப்பதாவது:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 பவுன்  வரையிலான நகைக் கடன்களில் 31.3.2021 வரை நிலுவையில் இருந்த  ரூ.6 ஆயிரம் கோடியை தள்ளுபடி  செய்து 11.70 லட்சம் பயனாளி களுக்கு ரூ.4,904 கோடி அளவிற்கு தள்ளுபடி சான்றிதழுடன் அடமானம்  வைத்த நகைகளை திருப்பி வழங்கி யுள்ளார்கள். மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடன் தொகை ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 80 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு, 1,01,963 குழுக்களைச் சேர்ந்த 10,56,816 மகளிர் பயன்பெற்றுள்ளனர். கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில்  இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப் பட்டு 1,90,499 சுயஉதவிக் குழுக் களுக்கு ரூ.10,99,707 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 66,24,955 விவ சாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கட னாக ரூ.53 லட்சத்து 340 ஆயிரத்து  60 கோடியும், கால்நடை வளர்ப்புக் காக 11,88,440 விவசாயிகளுக்கு ரூ.6  லட்சத்து 372 ஆயிரத்து 2 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 47,221 பேருக்கு ரூ.225.94 கோடியும், பணி புரியும் பெண்களுக்கு 16,578 பேருக்கு ரூ.470.01 கோடியும், மகளிர்  தொழில் முனைவோருக்கு 49 ஆயி ரம் பேருக்கு ரூ.283.27 கோடியும், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 4,494 பேருக்கு ரூ.18.80 கோடியும் கடன்  வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு முன்னணியில் 2022 இல் நியாய விலைக் கடை களில் 6,729 பணியாளர்களும், 2023 இல் கூட்டுறவுச் சங்கங்களில் 2,403 உதவியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. தற்போது 2,527 விற்பனையாளர் மற்றும் 826 கட்டு நர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. கட்டமைப்பு வளர்ச்சியில் 70  புதிய மாதிரி கூட்டுறவு மருந்தகங் கள் திறக்கப்பட்டு ரூ.39.87 கோடி  மருந்து விற்பனை நடைபெற்று உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1,000  முதல்வர் மருந்தகங்களை திறந்து 25  சதவீத தள்ளுபடியில் மருந்துகள்  வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. திண்டுக்கல் ஆத்தூரில் புதிய கூட்டுறவு கலை மற்றும் அறி வியல் கல்லூரி தொடங்கப்பட்டு 1,100  மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழ்நாட்டின் சிறந்த நிர்வாகத் திற்காக மத்திய அரசின் கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணை யம் மற்றும் மாநிலக் கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையம் ஆகியவற்றிலிருந்து பல விருதுகள் பெற்றுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.