tamilnadu

அரசுப் பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்

மதுரை, டிச.9- மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு சென்ற அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாரடைப்பால் மரணமடைந்தார். மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து  43 பயணிகளுடன் கிளம்பிய  அரசுப் பேருந்து காளவாசல்  அருகே சென்று கொண்டி ருந்த  போது, ஓட்டுநர் ஆறு முகத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.  வலி ஏற்பட்டவுடன் பயணி களுக்கு பாதிப்பின்றி பேருந் தை சாமர்த்தியமாக சாலை யின் ஓரமாக நிறுத்தியநிலை யில் ஓட்டுநரின் உயிர் பிரிந்தது. பயணிகள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த 108 ஆம்பு லன்ஸ் குழுவினர், ஓட்டுநரின் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

;