1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் இந்திய வெற்றிபெற்றதன் பொன்விழாவையொட்டி, தாய் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையில் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள போர் நினைவு சின்னத்தில் வியாழனன்று(டிச.16) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தென் மண்டல ராணுவ தலைமை அதிகாரி அருண் உடனிருந்தார்.