மதுரை:
துபாயிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானத்தில்வந்த பயணிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர்சோதனை நடத்தினர்.இரு பயணிகளிடம் நடத்திய சோதனையில் 1091.560 கிராம் எடைகொண்ட ரூ.56 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ளதங்கக் கட்டிகள் சிக்கின. பயணிகள் தங்கக்கட்டிகளை களிமண்ணில் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இருவரையும் சுங்க இலாகா நுண்ணறிவுப்பிரிவினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.