தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் வெற்றி; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!
சென்னை, ஜூலை 9 - நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் - மறியல் போராட்டத்தை தமிழகத்தில் பெரும் வெற்றிபெறச் செய்த தொழிலாளர்கள், விவசா யிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்துப் பகுதி மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம், அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தொழிலாளர் - தொழிற்சங்க உரிமைக்கான போராட்டம்
இந்தியா முழுவதும் புதனன்று மத்திய தொழிற்சங்கங்கள், சம்மேளனங்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாதர், மாணவர், இளைஞர் உள்ளிட்ட மக்கள் அமைப் புகளின் சார்பில் பொது வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டம் வெற்றி கரமாக நடந்துள்ளது. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஊதியம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்கவும், மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் மின்சார சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறவும், பொதுத் துறை பாதுகாப்பு, விவசாய விளைப் பொருட் களுக்கு உற்பத்தி செலவிற்கு மேல் ஒன்றரை மடங்கு விலை, 100 நாள் வேலை திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்குதல், அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி உயர்வை கைவிடு தல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்டு 17 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்று உள்ளது.
ஒன்றிய அரசு நிறுவனங்களில் முழு அளவில் வேலைநிறுத்தம்
தமிழகத்தில் மத்திய பொதுத்துறை நிறு வனங்களான பி.எச்.இ.எல்., சேலம் ஸ்டீல், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பவர் கிரிட் கார்ப்பரேஷன், சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள், வங்கி, இன்சூரன்ஸ், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் மின்சார வாரியம் போன்ற துறைகளில் வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு போன்ற நகரங்களில் பன்னாட்டு நிறு வனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், கோயம்புத்தூர், திருவள்ளூர், மதுரை புறநகர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள உற்பத்தி நிறுவனங்களிலும் வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளது. அரசு ஊழியர்கள், அங்கன்வாடி, ஐ.சி.டி.எஸ் ஊழியர்கள், முறை சாரா தொழிலாளர்களும் இந்த வேலை நிறுத்தத் தில் கணிசமாக பங்கேற்றனர்.
பல்லாயிரக்கணக்கானோர் மறியலில் பங்கேற்றுக் கைது
தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களி லும், நகரங்கள், பேரூர்கள், தொழிற்சாலை கள், பொதுத்துறை நிறுவனங்கள், ஒன்றிய அரசு அலுவலகங்கள், ரயில்வே நிலையங்கள் முன்பு மறியல் போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் தொழிலா ளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர் கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்லாயிரக்கணக்கானோர் கைதாகியுள்ளனர். மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
காவல்துறை அராஜகம் கண்டனத்திற்கு உரியது
இந்த மறியல் போராட்டத்தில் ஒருசில இடங்களில் காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டது. குறிப்பாக, விழுப்புரம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அமைதி யான முறையில் நடைபெற்ற மறியலில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசாரின் இந்த ஜனநாயக விரோத அத்துமீறல்களை வன்மையாக கண்டிப்பது டன், தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், அத்து மீறலில் ஈடுபட்டவர்கள் மீதும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.