சதுரங்க (செஸ்) விளையாட்டும் கூட தமிழர்கள் தான் விளையாடி யிருக்கின்றனர் என்பதை தெளிவாக்குகிறது கீழடி அக ழாய்வு. பண்டைத் தமிழர் கள் விளையாட்டு தொடர்பு டைய பல பொருட்கள் கிடைத் துள்ளன.
கீழடி அகழாய்வு என்ன சொல்கிறது?
“கீழடி அகழாய்வில் பண்டைத் தமிழர்கள் விளை யாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்ததை நிரூபிக்கும் வகையில் பல வகையான பொருட்கள் கிடைத்துள்ளன. பல்வேறு வடிவங்களில் பல்வேறு குறியீடுகள் பொறிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ஆட்டக்காய்கள் கீழடி தொடர்பான கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளன. ஆட்டக்காய்களை வைத்து விளையாடும் சதுரங்க விளையாட்டையோ அல்லது அது போன்ற வேறு ஒரு விளையாட்டையோ நம் முன்னோர் இந்தக் காய்களை கொண்டு விளையாடி இருக்கலாம் என்று கருதப்படு கிறது. ஒருவேளை சதுரங்கத்தின் தாய் விளையாட் டாகக் கூட அது அமைந்து இருக்கலாம். கண்காட்சி யில் அந்தக் காய்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஒரு குறிப்பும் எழுதப்பட்டுள்ளது. அதில், கருப்பு, வெள்ளை கட்டங்கள் வரைந்த அட்டைகளை கொண்டு இருவர் மட்டும் எதிர் எதிரே அமர்ந்து ஆடும் ஆட்டம். ஒவ்வொரு ஆட்டக்காரரும் 16 காய்கள் வைத்து விளையாடுவர். ஒருவர் எத்தனை காய்களை வீழ்த்துகிறாரோ அவர் ஆட்டத்தில் வெற்றி பெற்றதாகவும், காய்களை இழந்தவர் தோல்வி அடைந்ததாகவும் கருதப்படுவார் என எழுதப்பட்டுள்ளது”. தமிழன், தமிழர், தமிழ் மக்கள் அனைத்திலும் சாதனை படைத்துள்ளனர் என்பது கீழடி அகழாய்வின் மூலம் நிரூபணமாகிறது. இந்தத் தருணத்தில் தான் தமிழனின் பெருமையை பறைசாற்றும் வகையில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் சென்னை-யில் (செஸ் ஒலிம்பியாட்) நடைபெறுகிறது. 2022- செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த அகில இந்திய செஸ் கூட்டமைப்பு All India Chess Federation (AICF) முன்வைத்த ஏலத்திற்கு (Federation or World Chess Federation) FIDE கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
போட்டிக்கான சரியான அட்டவணை விவாதிக்கப் பட்டு வருகிறது. ஜூலை மாத இறுதியில் மற்றும் ஆகஸ்ட் தொடக்கத்தில் போட்டிகள் நடைபெறுவது உறுதியாகி விட்டது. போட்டிக்கான நாட்கள் மிகக்குறைவாகவே உள்ளது. கிழக்கிந்தியாவில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள, ஏழு மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரம் சென்னை. இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்ட ரான புகழ்பெற்ற உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந் தின் சொந்த ஊரும் இதுவே. ஆனால், சென்னையின் செஸ் பாரம்பரியம் இன்னும் பின்னோக்கிச் செல்கிறது, சர்வதேச மாஸ்டர் பட்டத்தை எட்டிய முதல் இந்திய வீரர் மானுவல் ஆரோனும் சென்னையில் வளர்ந்தவர் தான். மானுவேல் ஆரோன் மியான்மரில் பிறந்தவர். இதற்கு முன்பு சென்னையில் 2013-ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்து மேக் னஸ் கார்ல்சன் உலக சாம்பியனாக முடிசூட்டப்பட்டார். மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பயிட் போட்டி நடத்து வது குறித்துப் பேசிய அகில இந்திய செஸ் பெடரேஷன் தலைவர் பாரத் சிங் சௌஹானும் அவரது குழுவின ரும் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்கனவே பெற்ற அனுபவத் தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். “உலகின் மிகப்பெரிய நிகழ்வான தில்லி செஸ் ஒப்பன் அனுபவம், பெரிய உதவியாக இருக்கும். நாங்கள் ஏற்க னவே அதிக எண்ணிக்கையிலானவர்களைக் கையாண் டுள்ளோம். ஆனால் ஒலிம்பியாட் மிகப்பெரிய களம். அதை சிறப்பாக மாற்றுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்”. மாஸ்கோ மற்றும் காண்டி மான்ஸ்க்- (Khanty- Mansiysk) இல் நடைபெறவிருந்த 44-ஆவது ஒலிம்பி யாட், உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியாவிற்கு மாற்றப் பட்டது. குறிப்பாக தமிழகத்திற்கு அந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.
FIDE தனது முடிவை அறிவித்த சில நிமிடங்களில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவின் செஸ் தலைநகரம் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது! தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம்! உலகெங்கிலும் உள்ள அனைத்து மன்னர் களையும் ராணிகளையும் சென்னை அன்புடன் வர வேற்கிறது!” எனத் தெரி வித்துள்ளார். 2018- ஆம் ஆண்டு, ஒலிம்பியாட் போட்டியை ஜார்ஜியா நடத்தியது. அந்தப் போட்டியில் 180 நாடுகளைச் சேர்ந்த 918 வீரர்கள், பெண்கள் பிரிவில் 146 நாடுகளைச் சேர்ந்த 747 பேர் கலந்து கொண்டனர். 2000 வீரர்கள் பங்கேற்றா லும் கூட அனைத்து வசதி களையும் செய்துதரத் தயா ராக உள்ளோம். “நாங்கள் ஏற்கனவே வீரர்கள், அதிகாரி கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு போதுமான அறை களை முன்பதிவு செய்துள்ளோம். இது ஒரு பெரிய லாஜிஸ்டிக்கல் சவால் என்பதை அறிவேன், ஒரு மறக்க முடியாத ஒலிம்பியாட்டை நடத்துவதில் பெருமகிழ்ச்சி யடைகிறோம். இந்தத் தருணத்தில் சதுரங்கத்தில் இந்தி யாவின் பெருமைகளை நிலை நிறுத்துவோம் என்கிறார் அகில இந்த செஸ் பெடரேஷன் செயலாளர் பாரத் சிங் சௌகான்.
இந்தப் போட்டியில் ஒரு புரவலராக உள்ள இந்தியா ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு அணிகளையும், ஒற்றைப்படை எண் உள்ளீடுகளின் போது மூன்றாவது அணியையும் களமிறக்குகிறது. அகில இந்திய செஸ் பெடரேஷன் ஒலிம்பியாட் செயல கத்தை தமிழக அரசுடன் எளிதில் தொடர்பு கொள்வ தற்கு வசதியாக போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலேயே அமையவுள்ளது. வழக்கமாக, ஒலிம்பியாட் நடத்த நான்கு ஆண்டுகள் அவகாசம் கிடைக்கும், ஆனால் எங்களுக்கு நான்கு மாதங்களுக்கும் குறைவாகவே உள்ளது. நாங்கள் 24 மணிநேரமும் பணியாற்ற உள்ளோம். போட்டி நடை பெறும் நாட்களில் ஆங்கிலம் தவிர ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் அரபு மொழிகளில் தொலை பேசி உதவிகளை வழங்குவோம். இந்திய அணிக்கு ரூ. ஒரு கோடி ஸ்பான்சர் கிடைத்துள்ளது. கடந்த ஒலிம்பி யாட் போட்டியில், ஸ்பான்சர் ரூ.25 லட்சத்துக்கும் குறை வாக இருந்துள்ளது. அனைத்து விளையாட்டுகளையும் தடையற்ற நேரடி ஒளிபரப்பு செய்வது, ஒலிம்பியாட் நடத்துபவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறைபாடற்ற ஒளிபரப்பை உறுதி செய்வதற்காக, சென்னையை தளமாகக் கொண்ட முக்கிய மைக்ரோசென்ஸ் நெட்வொர்க்குகள் மூலம் இந்த மகத்தான சவாலை எதிர்கொள்ள முடியும் என All India Chess Federation நம்புகிறது. உலக அளவில் பங்கேற்கப் போகும் வீரர்கள், தமிழகத்தின் முன்னணி வீரர்கள் 700 தன்னார்வலர்கள் என அனைவருக்கும் போதுமான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது.