நாகர்கோவில், டிச.15- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குருப் -2 மற்றும் குருப்-4 பணிக்காலி யிடங்களுக்கான போட்டித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில் மூலமாக நேரடியாக அலு வலகத்தில் வைத்து நடத்தப்படவுள்ளது. இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 17.12. 2021 முதல் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலக வேலைநாட்களில் நடைபெற இருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து தன்னார்வ பயிலும் வட்ட உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 9499055932 என்ற அலைபேசி எண்ணிற்கு அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் இணைய தள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாண வர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.