சென்னை, டிச.25- பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர் களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு கூறிய அனைத்து ஆலோசனைகளை யும் பாக்ஸ்கான் நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும் புதூர் வட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள் ளது பாக்ஸ்கான் நிறுவனம். இதில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழி லாளர்கள், பாக்ஸ்கான் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதி யில் உணவின் தரம் மற்றும் குறைபாடு களைக் களையக்கோரி, இம் மாதம் 18 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களது போராட்டத்தை சிஐடியு தலைவர்கள் ஆதரித்தனர். இந் நிலையில், அவர்களை கைது செய்து சிறை யிலடைத்தது காவல்துறை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்பிரச்ச னையில் தலையிடுமாறு தமிழக முதல்வ ருக்கு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களது கோரிக்கையை அரசு பரிசீ லித்து ஆவன செய்யப்படும் என்று கூறிய தன் அடிப்படையில், போராட்டத்தைக் கை விட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, டிச.23 அன்று தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதி காரிகள், பாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதி நிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசுத் தரப்பில் சில ஆலோச னைகளையும் அறிவுறுத்தல்களை வழங்கி, அதனைச் செயல்படுத்துமாறும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:- ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களின் சூழ்நிலைகளை மேம் படுத்தித்தர வேண்டும். தங்கும் விடுதி களின் தரத்தை உயர்த்தித்தர வேண்டும். தேவையான இடவசதி, குளியல் அறை, கழிவறை, குடிதண்ணீர், காற்றோட்டமான அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதி களைச் செய்துதர வேண்டும், உள்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்தித்தர வேண் டும். தொழிலாளர்கள் தங்கும் விடுதிக்கு மாவட்ட ஆட்சியரிடம் உரிய தரச்சான்று பெற வேண்டும். தங்கும் இடத்திலேயே சமை யலறை அமைத்துத் தரமான உணவு களைச் சமைத்து, அவர்களுக்கு உரிய நேரத் தில் வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவசர நிமித்தம் கார ணமாக விடுப்புக் கேட்கும்போது வழங்க வேண்டும். விடுப்பில் செல்லும் தொழிலா ளர்களுக்கு மாற்றாக தேவையான தொழி லாளர்களை மனிதவள முகமைகள் செய்து தர ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசு தெரிவித்த இந்த ஆலோ சனைகள் / அறிவுறுத்தல்களை தவறாமல் செயல்படுத்துவதாக பாக்ஸ்கான் நிறுவனத் தினர் தெரிவித்தனர்.
15 ஆயிரம் பெண் தொழிலாளர்கள்
பெண் தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும், மேலும், இந்நிறுவனத்தில் பணிபுரியும் 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தினந் தோறும் உணவு வழங்கப்படுகிறது எனவும், அதனை ஒப்பந்ததாரர்கள் தரமாக வழங்கு வதை இனி உறுதி செய்வதாகவும் தெரி வித்தனர். தொழிற்சாலையில் உற்பத்திப் பணி களை விரைவில் தொடங்க இருப்பதாக வும் தெரிவித்தனர். மேலும், இத்தொழிற் சாலையை இவ்விடத்திலேயே விரிவு படுத்தி, புதிய வேலைவாய்ப்புகள் உரு வாக்கித்தரப்படும் எனவும் உறுதியளித்த னர்.
ரூ.570 கோடியில் தங்கும் விடுதி
சிப்காட் நிறுவனத்தின் மூலமாக வல்லம் வடகாலில், தொழிலாளர்கள் தங்கு வதற்கென விடுதிகள் சுமார் 18,750 பேர்கள் தங்கும் அளவில், ரூபாய் 570 கோடி செல வில், 20 ஏக்கர் நிலப்பரப்பில், 8 தொகுதி களாக, 11 மாடிகள் கொண்டதாக வடிவ மைக்கப்படவுள்ளது. புதிய கட்டுமான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இப்பணி கள் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.