பெரம்பலூரில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்
பெரம்பலூர், செப்.10 - பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட லாடபுரம் ஊராட்சியில், சட்ட மன்ற உறுப்பினரின் தொகுதி மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணி, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணி, அயோத்திதாசர் திட்டத்தின்கீழ் ரூ.15 லட்சத்தில் தார்ச் சாலை அமைக் கும் பணி, ரூ.5 கோடியில் லாடபுரம் பிரிவு சாலை மேம்பாடு மற்றும் பாலம் கட்டும் பணி என மொத்தம் ரூ.5.98 கோடியில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு போக்கு வரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமை வகித்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித் தார். தொடர்ந்து, மேலப்புலியூர் ஊராட்சி யில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியின்கீழ் ரூ.7.50 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை பொதுமக்க ளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.