tamilnadu

img

பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கொள்ளிடம் ஆற்றில்  வெள்ள அபாய எச்சரிக்கை 
பாபநாசம், ஜூலை 28-  மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் சுமார் 1,50,000 கன அடி உபரி நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுவதால், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து அறிவுறுத்தியுள்ளார்.  அதன் பேரில், பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில், அய்யம்பேட்டை அருகே, கோவிந்தநாட்டுச் சேரி ஊராட்சியைச் சேர்ந்த கொள்ளிடக்கரையோரம் உள்ள பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிகாடு உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை, ஆட்டோ அறிவிப்பின் மூலம் பொதுமக்களிடையே தெரிவிக்கப்பட்டது.  இதில் கோவிந்த நாட்டுச்சேரி முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர்,  ஊராட்சி செயலாளர் முருகையன், கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், கிராம உதவியாளர் கீதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.