இராமநாதபுரம், ஜூலை 19- இராமநாதபுரம் மாவட் டம் இராமேஸ்வரத்தில் மீன் பிடித் தொழிற்சங்க கூட்ட மைப்பின் மாநில தலைவ ரும், சிஐடியு மாவட்ட நிர் வாகி தோழர் எம்.கருணா மூர்த்தி 5.7.2025 அன்று மரணம் அடைந்தார். தோழர் கருணாமூர்த்தி யின் படத் திறப்பு விழா வெள்ளியன்று மீன்பிடி சங்க மாநில தலைவர் ஜி.ஜெலஸ் டின் தலைமையில் நடை பெற்றது. சிஐடியு மாநில பொ துச்செயலாளர் ஜி.சுகுமாரன் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். ஏஐஎப்எப்டபிள்யுஎப் அகில இந்திய பொதுச்செய லாளர் புல்லுவிளா ஸ்டா ன்லி, சிஐடியு மாவட்டச் செய லாளர் எம்.சிவாஜி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர். குருவேல், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் நா. கலையரசன், கே.கருணா கரன், தாலுகாச் செயலாளர் ஜி.சிவா, நகர்மன்றத் தலை வர் நாசர்கான், மீன்பிடி சங்க பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் என்.பி.செந்தில், டி.ராமச் சந்திரபாபு, மீன்பிடி தலைவர் கள் லோகநாதன், ஜெய் சங்கரன், ஜீவா, சிஐடியு நிர் வாகிகள் பச்சமால், ஆர்.வாசுதேவன், சிபிஎம் கட லாடி கிழக்கு தாலுகாச் செய லாளர் ராமசாமி, எஸ்எப்ஐ மாவட்டச் செயலாளர் ஜாய்சி, சிபிஐ நகரச் செய லாளர் சி.ஆர்.செந்தில் ஆகி யோர் புகழஞ்சலி உரை யாற்றினர்.