tamilnadu

img

விவசாயிகள் சங்க 30 ஆவது மாநில மாநாடு கம்பத்திலிருந்து கொடிப்பயணம் துவங்கியது

தேனி/நாகப்பட்டினம்,செப்.16- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30 ஆவது மாநில மாநாடு நாகப்பட்டி னத்தில் நடைபெறுவதை தொடர்ந்து கம்பத்தி லிருந்து செப்டம்பர் 16 வெள்ளிக்கிழமை யன்று கொடிப்பயணம் துவங்கியது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30 ஆவது மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் 17 (இன்று) துவங்குகிறது. செப்டம்பர் 16 வெள்ளியன்று மாநாட்டு நிகழ்வில் ஏற்றக்கூடிய சங்கக்  கொடியை கம்பத்திலிருத்து எடுத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் கம்பம் ஏரியா செயலாளர் கே.கர்ணன் தலைமை வகித்தார். கொடியினை அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செய லாளர் ஏ.வி.அண்ணாமலை, விவசாயிகள்  சங்க தேனி மாவட்டச் செயலாளர் டி.கண்ண னிடம் வழங்கினார் . இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்க டேசன், விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் ,மாவட்டத் தலைவர் எஸ்.கே.பாண்டியன் ,மாவட்ட பொருளாளர் மணிகண்டன் ,விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏரியா செயலாளர் கே.ஆர்.லெனின்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

வரலாற்று கண்காட்சி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30-வது மாநில மாநாட்டின் தொடக்க நிகழ்வாக வெள்ளியன்று வரலாற்று கண்காட்சி திறக்கப்பட்டது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆற்றிய களப்பணிகள், சந்தித்த போராட்ட ங்கள், செய்த தியாகங்கள் என கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை தொகுத்து அனைவரும் பார்க்கும் வண்ணம் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. மாநாட்டு வளாகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியை, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் திறந்து வைத்தார். சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வி.மாரிமுத்து, மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் வி.பி.நாகைமாலி எம்எல்ஏ, மாநில செய லாளர் சாமி.நாடராஜன், வரவேற்புக் குழு செயலாளர் கோவை.சுப்பிரமணியன், மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

;