மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நாளில் பாடல்பாடி, நடனமாடி விவசாயிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், வியாழக்கிழமை சிங்கு எல்லையில் அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்த ஒரு விவசாயி ஜோ போலே சோ நிஹால்... சத் ஸ்ரீ அகல் (பஞ்சாபியில் வெற்றி முழக்கம்) என்று கர்ஜனை செய்தார். தங்களது கோரிக்கை ஏற்கப்பட்டு சனிக்கிழமையன்று வீடுகளுக்குச் செல்லவுள்ள னர். கடந்த 378 நாட்களாக போராட்டக் களத்தில் இருந்த விவசாயிகள், மேள தாளங்கள் முழங்க, நடனமாடினர்.
யாரும் கற்பனை செய்ய முடியாத அளவில்....
பாட்டியாலாவைச் சேர்ந்த விவசாயி குல்தீப் சிங் (40) என்பவர் கடந்த ஒரு வருடமாக தான் தங்கியிருந்த கூடாரத்தின் தார்பாயை அகற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் பேசியபோது, தாம் இந்த இடத்தை தவறவிட்டுச் செல்வதாகவே நினைக்கிறேன். ஆனால் வீடு திரும்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன். யாரும் கற்பனைகூட செய்திருக்க முடியாத அளவிற்கு இவ்வளவு வாக னங்கள், தள்ளுவண்டிகள் மற்றும் கொடிகள் ஒரே இடத்தில் இருந்ததை என்னால் மறக்கமுடியாது என்றார்.
மறக்க முடியாத அனுபவம்
ஹரியானா மாநிலம் கைதாலைச் சேர்ந்த காந்தி வீர் பன் கூறுகையில், ஒரு வருடம் தில்லி யில் தங்குவதற்கு இலவசமாக இடம் கிடைத்தது. இப்போது நான் அதை விட்டுவிட்டுச் செல்கிறேன். இந்த ஒரு வருடப் போராட்டம் எங்கள் வாழ்க்கை யில் மறக்கமுடியாத ஒன்று,” என்றார்.
போராட்ட வடுக்கள் நிலைத்திருக்கும்
கடந்த ஒரு வருடமாக ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு சிகிச்சையளித்து வந்த லைஃப் கேர் அறக்கட்டளை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் அவதார் சிங் கூறுகையில், “ அனைத்து விவசாயிகளும் இந்த இடத்தை விட்டுச் செல்லும் வரை எங்களது சேவை தொடரும். நாங்கள் விவ சாயிகளுக்கு அளித்த சேவையை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளோம். அவர்களது போராட்ட வடுக்கள் எப்போதும் இந்த இடத்தில் நிலைத்திருக்கும் என்றார். எங்கள் மருத்துவ மனையில் விவசாயிகள் மட்டுமல்ல, உள்ளூர் மக்களும் சிகிச்சை பெற்றனர். போராட்டத்தின் போது நாங்கள் 700 க்கும் மேற்பட்டவர்களை இழந்தோம். மருத்துவமனை இல்லையென்றால் இந்த எண்ணிக்கை கடுமையாக உயர்ந்தி ருக்கலாம், கடவுளின் ஆசீர்வாதத்தால் இந்த சேவையை நாங்கள் செய்தோம் என்றார். மேலும் அவர் கூறுகையில். “வயது முதிர்ந்த விவசாயிகள் இந்தப் போராட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை. சில சூழ்நிலைகள் காரண மாக அவர்கள் களத்தை விட்டு வெளியேறியி ருந்தால், விவசாயிகளின் எதிர்ப்பு வீழ்ச்சியடைந்தி ருக்கவும் வாய்ப்புள்ளது.” என்றார்.
வாழ்நாள் நட்பை கொடுத்த போராட்டம்
பர்னாலாவைச் சேர்ந்தவர் ஐக்தேவ் சிங், அடிப்படையில் ஒரு விவசாயி. போராட்டத்திற்கு இவர் கேமிராவுடன் வந்திருந்தார். தினம் தோறும் போராட்டக்களத்திற்கு சைக்கிளில் சென்று புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், 10 வருடங்கள் திருமண புகைப்படக்கலைஞராக இருந்தேன். பின்னர் விவசாயியாக மாறினேன். ஒரு வருடத்திற்கு முன் கேமிராவை எடுத்தேன். அந்தப்பணியை நிறுத்துவேன் என நான் நினைக்கவில்லை என்றார். இந்தப் போராட்டம் பலருக்கு வாழ்நாள் நட்பைக் கொடுத்திருக்கிறது. சங்ரூரைச் சேர்ந்த 22 வயதான ஜக்தர் சிங், பாட்டியாலாவைச் சேர்ந்த தனது நண்பர் ஜக்மேஹர் சிங் (47) என்பவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்: நாங்கள் இங்கு வாழ்நாள் நண்பர்களாகிவிட்டோம். பாட்டியாலா வில் எனக்கு நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் என்னை மனதில் வைத்துள்ளார் என்றார்.
கலவையான உணர்வுகள்
போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, அப்பகு தியில் உள்ள தெருவோர வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். ஒரு வருடமாக சிங்கு எல்லை யில் கடை வைத்திருந்த ராம்வீர் சிங், அவரும் அவரது குடும்பத்தினர் கூறுகையில், வியாபாரம் நன்றாக நடந்து வந்தது. இப்போது இங்கிருந்து நான் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று கடை அமைக்க வேண்டும் என்றார்.