tamilnadu

img

20 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

மதுரை,ஆக.30-

      தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 54 சுங்கச்சா வடிகளில் கட்டண உயர்வு  இரண்டு பிரிவாக அமல்படு த்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச் சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சா வடிகளுக்கும் ஆண்டு தோறும் கட்டணம் உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது.

      இதன் அடிப்படையில் செப்டம்பர் 1 ஆம் தேதி நள்ளி ரவு முதல் திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப் பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. மதுரை - அரு ப்புக் கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச் சாவடியில் சுங்க கட்டண உயர்வு 1 ஆம் தேதி நள்ளி ரவு முதல் அமலுக்கு வருவ தாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது . இந்தக் கட்டண நிர்ணயம் அனை த்தும் பாஸ் டேக் வாகனங் களுக்கு மட்டுமேபொரு ந்தும். பாஸ்டேக் இல்லாத  வாகனங்கள் இருமடங்கு கட் டணம் செலுத்த வேண்டும் என்று டோல்கேட் நிர்வா கம் தெரிவித்துள்ளது.