tamilnadu

img

ஒவ்வொரு ஒற்றை சிகரெட்டும் பறித்துச்செல்லும் இருபது நிமிட வாழ்க்கை

ஒவ்வொரு ஒற்றை சிகரெட்டும்  பறித்துச்செல்லும் இருபது நிமிட வாழ்க்கை

ஒவ்வொரு ஒற்றை சிகரெட்டை புகைக்கும் போதும் ஆண்கள் 17 நிமிட ஆயுளையும் பெண்கள் 22 நிமிட ஆயுளையும் இழக்கின்றனர். சராசரியாக ஒரு ஒற்றை சிகரெட்டை புகைப்பவர் தம் வாழ்நாளில் மதிப்பு மிக்க இருபது நிமிடங்களை இழக்கிறார் என்று புதிய ஆய்வு கூறுகிறது. 2020 இல் கணிக்கப்பட்டதை விட இது இரண்டு மடங்கு அதிகம்.

பத்தாண்டுகளை  பறித்துச்செல்லும் சிகரெட் மருத்துவர்கள் முன்பு நினைத்துக் கொண்டிருந்ததை விட சிகரெட்டுகள் ஒரு வரின் ஆயுளை அதிகமாகக் குறைக்கிறது என்பது சிகரெட்டினால் ஏற்படும் தீமைகள் பற்றிய இந்த புதிய ஆய்வின் மூலம் தெரிய  வந்துள்ளதால் 2025 ஆம் ஆண்டுடன் புகைக்கும் பழக்கத்தை முற்றிலும் கைவிட  வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலி யுறுத்துகின்றனர். “ஒரு ஒற்றை சிகரெட் சராசரியாக ஒரு  மனிதனின் இருபது நிமிட வாழ்வை பறித்துச்செல்கிறது. இருபது சிகரெட்டுகள் உள்ள ஒரு பாக்கெட்டை புகைப்பவர் சுமார் ஏழு மணி நேர வாழ்வை இழக்கிறார். இந்த பகுப்பாய்வின்படி பத்து சிகரெட்டுகளை புகைப்பதை ஜனவரி ஒன்றாம் தேதியுடன் கை விடுவதாகக் கொண்டால் ஜனவரி 8 ஆம் தேதிக்குள் அவர் தன் வாழ்நாளில் ஒரு நாள் இழப்பை தடுக்கிறார். பிப்ரவரி 5 ஆம் தேதி வரை ஒருவர் புகைக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொண்டால் அவர் தன் ஆயுளை ஒரு வாரகாலம் நீடிக்க வழி ஏற்படுகிறது. ஆகஸ்ட் ஐந்தாம் தேதி வரை புகைக்காமல் இருந்தால் அவர் ஒரு  மாதகாலம் கூடுதலாக வாழ வழி ஏற்படு கிறது. இதன் மூலம் ஆண்டின் இறுதியில் அவர் ஐம்பது நாட்கள் கூடுதலாக வாழ முடி யும்” என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி  ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  மக்களுக்கு “புகைத்தல் தீமையை ஏற்படுத்தக்கூடியது என்று பொதுவாக தெரிந்தாலும் புகை பிடிப்போர் இதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைவாக மதிப்பிடு கின்றனர்” என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆல்கஹால் மற்றும் புகையிலை ஆய்வுக் குழுவின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் சாரா ஜாக்ஸன் (Dr Sarah Jackson) கூறுகிறார். புகை பிடிக்கும் பழக்கத்தை கை விடாத  ஒருவர் சராசரியாக தன் ஆயுளில் ஒரு  பத்தாண்டை இழக்கிறார். விலை மதிக்கமுடி யாத ஒரு பத்தாண்டு. இழக்கப்பட்ட அந்த  ஆண்டுகளின் வாழ்க்கை, அதன் நிகழ்வுகள்,  பிரியமானவருடன் வாழும் வாழ்வின் மைல்கல் திருப்பு முனைகளை அந்த ஆண்டு களில் அவர் இழக்கிறார் என்பதே இதன்  பொருள். புகை பிடித்தல் உலகில் தவிர்க்கப்  படக்கூடிய நோய்கள், உயிரிழப்புகளுக்கான முன்னணி காரணம். உலகளவில் நீண்ட நாள் புகைப்போரில் மூன்றில் இரண்டு பேர்  இதனால் மட்டும் உயிரிழக்கின்றனர். ஆண்டுதோறும் இங்கிலாந்தில் 80,000  மரணங்களுக்கும், புற்றுநோயால் ஏற்படும்  உயிரிழப்புகளில் நான்கில் ஒரு பகுதி மர ணங்களுக்கும் புகை பிடித்தல் காரணமாக உள்ளது. பிரிட்டிஷ் மருத்துவர்களின் தரவு களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வுகள் சுகாதாரத் துறையால் நடத்தப்பட்டது. புகைப்பதால் ஏற்படும் தீமைகளை விரி வாக ஆராய 1951 இல் தொடங்கப்பட்ட உலகளவிலான மிகப்பெரிய ஆய்வுகள் பலவற்றில் இதுவும் ஒன்று. நாற்பதுகளில் பேரழிவு 1996 முதல் பெண்களின் ஆரோக்கியம் பற்றிய மில்லியன் பெண்கள் ஆய்வும்  (Million Women Study) இந்த ஆய்வுகளில்  அடங்கும். ஓர் ஒற்றைச் சிகரெட் ஒருவரின் வாழ்நாளில் சராசரியாக பதினோரு நிமி டங்களை குறைக்கிறது என்று பி எம் ஜே (BMJ) என்ற இதழில் வெளிவந்த முந்தைய ஆய்வு கூறியது. அடிக்ஷன் (Addiction) என்ற இதழில் இப்போது வெளிவந்துள்ள புதிய ஆய்வின்படி வாழ்நாள் இழப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது. “ஒருவரின் வாழ்வில் முதுமை நாள்  பட்ட நோய்வாய்ப்படுதல், ஊனம் போன்ற வற்றால் அடையாளப்படுத்தப்படுகிறது. முதிய வயதில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுவதால் புகை பிடிக்கும் பழக்கத்தால் வாழ்நாளில் ஒரு சில ஆண்டுகளை இழப்ப தால் பெரிய பாதிப்பு ஏற்படாது என்று சிலர்  கருதுகின்றனர். ஆனால் புகைத்தல் ஒருவ ரின் ஆரோக்கியமற்ற வாழ்நாளை அவரு டைய கடைசி காலத்தில் குறைப்பதில்லை. இப்பழக்கம் புகை பிடிப்பவரின் நடுத்தர வயதில் முதன்மையாக ஆரோக்கிய மான ஆண்டுகளை பறித்துச்சென்றுவிடு கிறது. உடல் நலமற்ற வாழ்விற்கு முன்னோட்  டமாக அமைகிறது. சில புகை பிடிப்ப வர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றனர் என்றாலும் ஒரு அறுபது வயது புகை பிடிப்ப வர் எழுபது வயதுள்ள புகை பிடிக்கும் பழக்கம் இல்லாத ஒருவரின் ஆரோக்கிய வரலாற்றைப் (health pro file) பெறு கிறார். வேறு சிலர் புகைப்பதால் உண்டாகும்  நோய்களால் நாற்பதுகளில் உயிரி ழக்கின்றனர். புகைக்கும் சிகரெட்டின் வகை, புகை  உள்ளிழுக்கப்படும் எண்ணிக்கை, புகைத்த லின் ஆழம், சிகரெட்டில் உள்ள நச்சுப்  பொருட்களை ஏற்கும் தன்மை போன்ற வற்றால் ஏற்படும் அழிவு வேறுபடுகிறது” என்று ஜாக்ஸன் கூறுகிறார். நீண்ட கால  ஆரோக்கியம் மற்றும் வாழ்வின் பயன்க ளைப் பெற ஒருவர் புகைப்பதை முழுமை யாக நிறுத்தவேண்டும் என்று ஆய்வா ளர்கள் வலியுறுத்துகின்றனர். புகைத்தலில் பாதுகாப்பு எல்லை என்று எதுவுமில்லை என்று முந்தைய ஆய்வு கூறியது. ஒரு நாளைக்கு இருபது சிகரெட்டுகளை பிடிப்பவரை காட்டிலும் ஒரு சிகரெட்டை மட்டுமே பிடிப்பவருக்கு இதய நோய், பக்க வாதம் போன்றவை 50% மட்டுமே குறை வாக ஏற்படுகிறது. புகைப்பதை எந்த வயதில் நிறுத்தினாலும் அதனால் பயன்  உண்டு. என்றாலும் புகைப்பவர் இப்பழக்கத்தை உடன் நிறுத்தினால் அவர் தன் முன்கூட்டிய மரணத்தை தடுக்கலாம். ஆரோக்கியமான வாழ்வை நீட்டிக்கலாம். புகைத்தலை கைவிட உதவும் தொழில்நுட்பங்கள் தனிநபரின் முன்னுரிமைக்கு ஏற்ப இப்பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் வழிகளை அறிய, ஆலோசனை பெற, ஆதரவு காட்ட யுகே தேசிய மருத்துவ சேவை களின் (NHS) செயலி மற்றும் தனிநபர் நிகழ்நேர திட்டம் போன்ற பல தொழில்  நுட்பங்கள் பயன்படுகின்றன. “புகைக்கப் படும் ஒவ்வொரு சிகரெட்டும் விலை மதிக்க முடியாத வாழ்வின் நிமிடங்களை நம்மிடம் இருந்து பறிக்கிறது. இதனால் ஏற்படும் ஒட்டு மொத்த தாக்கம் தனிநபர்களுக்கு மட்டும் இல்லாமல் ஆரோக்கிய சேவைகளுக்கும் பொருளாதாரத்திற்கும் பேரழிவை ஏற்படுத்துகிறது. இந்த ஆய்வு நமக்கு வலிமை வாய்ந்த  ஒரு நினைவூட்டல். இது தவிர்க்கக்கூடிய மரணங்களுக்கும் நோய்வாய்படுவதற்கும் உள்ள முன்னணி காரணமாக புகை பிடிக்கும் பழக்கத்தை அறிவிக்கவேண்டும் என்பதன் அவசரத் தேவையை வலியுறுத்துகிறது ” என்று மருத்துவர்களுக்கான ராயல்  கல்லூரியின் (Royal College of Physicians) புகையிலை சிறப்பு ஆலோ சகர் பேராசிரியர் சஞ்சய் அகர்வால் கூறு கிறார். புகை பிடிப்போரிடையில் இந்த ஆய்வு  ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.