tamilnadu

நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்காக ஆயிரம் சார்ஜிங் மையங்கள்

புதுதில்லி,பிப்.19-  ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல்  டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அவதிப்படுகின்றனர். விலையேற்றத்தால் மின்சார வாக னங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கார்பன் உமிழ்வு உள்ளிட்ட இயற்கை மற்றும் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் காரணிகளை கட்டுப் படுத்தும் வகையிலும் மின்சார வாக னங்களிள் விற்பனை அதிகரித்து வருகிறது.  இதனால்  நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜிங் நிலையங்க ளுக்கான (Electric Vehicle Charging Stations - EVCS) தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந் நிலையில் பன்முகப்படுத்தப்பட்ட எரி சக்தி நிறுவனமான இந்தியன் ஆயில் நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற் பட்ட எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை (EVCS) நிறுவியுள்ள தாக சமீபத்தில் அறிவித்துள்ளது. இது தொடர்பாக  இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் இயக்கு நர் வி.சதீஷ்குமார் கூறுகையில் , “ ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை வெற்றிகரமாக அமைத்துள்ளதன் மூலம், நாட்டில் எலக்ட்ரிக் வாகன புரட்சியை செயல்படுத்துவதற்கான எங்களின் பல மைல்கற்களில் முதல் சாதனையை நாங்கள் அடைந் துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.   மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள நெடுஞ் சாலைகளை இ-நெடுஞ்சாலைகளாக (e-highways) மாற்றவும் திட்ட மிட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறு வனம் மும்பை, தில்லி, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், சென்னை, கொல்கத்தா, சூரத் மற்றும் புனே ஆகிய இடங்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜிங் உள்கட்ட மைப்பை நிறுவி வருகிறது. இதனை தொடர்ந்து நாட்டிலுள்ள அனைத்து மாநில தலைநகரங்கள், ஸ்மார்ட் நகரங்கள், முக்கிய நெடுஞ் சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் இந்த பணியை மேற் கொள்ள திட்டமிட்டுள்ளது.