மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம், மருத்துவம், பொறியியல் கல்லூரிகளை அமைத்திடுக!
மாணவர் சங்கத்தின் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்
மயிலாடுதுறை, ஜூலை 18- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், இந்திய மாணவர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட 29 ஆவது மாநாடு பத்மாவதி மண்டபத்தில் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆர். அவினாஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பிரவீன் வரவேற்று பேசினார். மாநில துணைத் தலைவர் எஸ். குமரவேல், மாநாட்டை துவக்கி வைத்துப் பேசி னார். மாவட்ட வேலை அறிக்கையை மாவட்டத் தலைவர் அமுல் காஸ்ட்ரோ முன் வைத்தார். மாநில துணைச் செயலாளர் பா. ஆனந்த் தேர்வு செய்யப் பட்ட புதிய நிர்வாகி களை அறிவித்து உரையாற்றினார். மாவட்டத் தலைவராக அமுல் காஸ்ட்ரோ, செயலா ளராக ஆர்.அவினாஷ், துணைத் தலைவர்களாக பிரவீன், பகத்சிங், சுஜி, அவி னாஷ், துணைச் செயலாளர்களாக பாலா, பிர தீபா, ஆஸ்நாத், அபிலாஷ் உள்ளிட்ட 31 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் மாணவர் பேரவை தேர்தலை நடத்தி டவும், குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தியும், மயிலாடுதுறை மாவட்டத் தில் சட்டம், மருத்துவம், பொறியியல் கல்லூரிகளை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.