tamilnadu

img

இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது

சென்னை, மார்ச் 23- தமிழகத்தில் நுழைவுத்தேர்வு எந்த ரூபத்திலும் நுழைய முயற்சித்தாலும், அதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் தீவிரமாக எதிர்ப்பார் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் புதனன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்றக் குழுத்  தலைவர் ஜி.கே.மணி, “மத்தியப் பல்கலைக் கழக மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. இதனை அனுமதிக்கக்கூடாது” என்றார். இதற்கு பதிலளித்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொன் முடி, “எந்தக் காலத்திலும் தமிழகத்தில் உள்ள கலை,  அறிவியல் கல்லூரி    கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் நுழைவுத் தேர்வு எந்த ரூபத்தில் நுழைய முயற்சித்தாலும் அதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் தீவிரமாக எதிர்ப்பார்” என்றும் அவர் கூறினார்.