tamilnadu

img

கரூர் பெருந்துயரம் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம்! முதலமைச்சர் வேண்டுகோள்

கரூர் பெருந்துயரம் குறித்து  அவதூறு பரப்ப வேண்டாம்! முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை, செப். 29 - கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறுகள் மற்றும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ வில், “கரூரில் நடந்திருப்பது பெருந்துயரம் என்றும், கனத்த இதயத்துடனும் பெருந்துய ருடனும் தான் தாம் இன்னும் இருப்பதாகவும் தெரிவித்திருக்கும் முதலமைச்சர், “சோகமும் துயரமும் சூழ்ந்திருக்கும் சூழலில், பொறுப்பற்ற விஷமத்தன்மையான கருத்து களை தவிர்க்க வேண்டும்; அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். “எந்த அரசியல் கட்சித் தலைவரும், தொண்டர்கள், அப்பாவி மக்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள். எனவே, கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற கூட்டங்களை  வரும்காலங்களில் நடத்த வேண்டுமென்றால் அதற்கான விதிகளை வகுக்க வேண்டியது நமது கடமை. நீதிபதியின் அறிக்கை கிடைத்த வுடன் அனைத்து கட்சிகளுடனும் ஆலோச னை நடத்தி, இதற்கான விதிகள், நெறிமுறை கள் வகுக்கப்படும். மனித உயிர்களே எல்லாவற்றுக்கும் மேலானது, மானுடப் பற்றே அனைவருக்கும் வேண்டியது” எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.