tamilnadu

திமுக எம்.பி மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

சென்னை, மார்ச் 10-  மாநிலங்களவை  திமுக உறுப்பினர் என்ஆர். இளங்கோ  மகன் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு மது விலக்கு சோதனைச்சாவடி அருகே நிகழ்ந்த சாலைவிபத்தில் உயிரிழந்தார். சென்னையில் இருந்து தனது நண்பர் வேதவிகாஷீடன் காரில் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி நோக்கி சென்றபோது கார் சாலையின் செண்டர் மீடியன் தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் இளங்கோ மகன் ராகேஷ் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.  நண்பர் வேதவிகாஷ் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டகுப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.