tamilnadu

img

நீர் நிலைப்பகுதியை ஆக்கிரமித்து கட்டிடம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீர் நிலைப்பகுதியை ஆக்கிரமித்து கட்டிடம்  மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர், அக். 11-  பெரம்பலூர் நகர் பகுதியான பாலக்கரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு துறைமங்கலம் ஏரிக்குச் செல்லும் நீர்நிலை வாய்க்கால் அமைந்துள்ளது.  இந்த வாய்க்கால் வழியாகத்தான் பெரம்பலூர் நகர் பகுதியில் பெய்யும் மழை வடிந்து ஓடுகிறது. இந்நிலையில், அந்த இடத்தை ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் ஒன்று பெரிய அளவிலான கட்டிடம் கட்டி வருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் பேரில், மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இதுகுறித்து தெரிவித்தவர், நீர்நிலைப் பகுதியில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டிருந்தால் அப்பகுதியை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.