நியமன அலுவலர் பதவி உயர்வு வழங்க கோரிக்கை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பட்டினிப் போராட்டம்
சென்னை, அக். 7 - நியமன அலுவலர் பதவி உயர்வு வழங்கக் கோரி செவ்வாயன்று சென்னையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பட்டினிப் போராட்டத் தில் ஈடுபட்டனர். சட்டப்பூர்வ தகுதி இருந்தும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் வாக்குறுதி அளித்தும் வழங்கப்படாமல் உள்ள நியமன அலுவலர் பதவி உயர்வை வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். பணியில் சேர்ந்தது முதல் உரிய ஊதியம் வழங்கப்படாத வர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். புதிதாக உரு வாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களை மாவட்ட நியமன அலுவலர்களாக நியமிக்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் இந்த போராட் டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தினிடையே செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் மு.சி.முருகேசன் கூறுகை யில், “30 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. 584 உணவுப் பாதுகாப்பு அலுவலர்களில் ஒரு பகுதியினருக்கு 5.08.2011 முதல் சம வேலைக்கு சம ஊதியம் தரப்பட வில்லை. இது தொடர்பாக அர சிடம் பலமுறை முறையிட்டும் கோரிக் கைகளை நிறைவேற்றவில்லை. இதனை தொடர்ந்து தொடர் உண்ணா நிலை போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம்” என்றார். சங்கத்தின் மாநிலத் தலைவர் தா. ஸ்டாலின் ராஜரத்தினம் தலைமை யில் நடைபெற்ற இந்த போராட் டத்தில் மாநிலப் பொருளாளர் இரா. வேலன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சா. டேனியல் ஜெய்சிங் போராட்டத்தை துவக்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டி யன், திராவிடர் கழக பொருளாளர் வி.குமரேசன், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது, விசிக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட தோழமை அமைப்புகளின் தலைவர்கள் பேசினர்.
