tamilnadu

img

ஆபத்தான முறையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக்கழிவுகள்!

ஆபத்தான முறையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக்கழிவுகள்!

நாமக்கல், ஜூலை 10- பள்ளிபாளையம் அருகே சாலையோரம் ஆபத்தான முறையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக்கழிவுகளை உடன டியாக அகற்ற வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சிக்குட்பட்ட வாய்க்கால் கரையோரம் ஏராளமான குடி யிருப்புகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு  ஆபத்தான முறையில் ஆயிரக்கணக்கான ஊசிகள், சிரஞ்சு கள், எச்ஐவி பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட ரத்த மாதிரி கள், கையுறைகள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் எவ்வித பாதுகாப்பு அம்சங்களையும் கடைப்பிடிக்காமல் சிலர் வீசி  சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரத் தொற்று  பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார ளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் கூறுகையில், இச்சாலை வழியே பள்ளிக்கு சென்று வரும் சிறு வயது குழந்தைகள் அதிகம் உள்ளனர். விளையாட்டு தன மாக ஊசி, சிரஞ்சு, மருத்துவக்கழிவுகளை கையில் எடுத்து அவர்கள் விளையாடி வருகின்றனர். இங்கு கொட்டப்பட் டுள்ள மருத்துவக்கழிவுகள் அரசு அல்லது தனியார் மருத்துவ மனை சார்பில் கொட்டப்பட்டதா? என அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும், முறையான குப்பைத்  தொட்டி இல்லாததால் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப் பட்டு சுகாதார சீர்கேடும் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. வெட்ட  வெளியில் அதிகளவு ஊசிகள் கிடப்பதால் சமூக விரோதி கள் இந்த ஊசிகளை தவறான வழிகளில் பயன்படுத்துவதற் கும் வாய்ப்புள்ளது. எனவே, அதிகாரிகள் இந்த விவகாரத் தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.