சென்னையில் சாலை விபத்து ஏற்படும் 513 இடங்களில் ஆபத்து குறியீடு
சென்னை, ஆக. 8- சென்னையில் விபத்து நிகழும் சாலை களில் 513 இடங்களில் ஆபத்து குறியீடு கள் அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சென்னையில் சாலை விபத்துகளை குறைப்பதற்கும், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அதிகப்படியாக போக்குவரத்து அமலாக்க பணிகள், ரோந்து பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு நட வடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரு கிறது. மேலும், போக்குவரத்து விதி களை கடைபிடிக்கவும், பாதுகாப்பு வழி காட்டுதல்களை பின்பற்றவும், பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தவும், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் விபத்துகளை குறைக்க போக்குவரத்து காவல் துறை யினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள, சாலை விதிகள் குறித்த நெறிமுறைகள், மாணவர்களின் அன்றாட நடைமுறையில் பிரதிபலிப்பதை உறுதி செய்வதும் முக்கியமான செயல் திட்டமாகும். மாநகராட்சியின் ஆய்வில், நகரின் அபாயகர பகுதிகள் மற்றும் விபத்து நிகழும் சாலைகளில் மேலும் 513 இடங்களில் ஆபத்து குறியீடுகள் அமைக்க வேண்டிய கட்டாயம் கண்டறியப்பட்டுள்ளது. இதில், 353 இடங்களில் தற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த குறியீடுகள், மைய தடுப்புசுவர்கள், சாலை முனைகள் மற்றும் ஆபத்தான வளைவு களில் அமைக்கப்பட்டு, வாகன ஓட்டி களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்குகின்றன. சென்னையின் பரபரப்பான சாலை களில், குறிப்பாக அதிக வாகன நெரிசல் உள்ள பகுதிகளில், இத்தகைய குறியீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாநகராட்சி, இந்த பணிகளை துரிதப்படுத்தி, அனைத்து மண்டலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்காக, நவீன தொழில்நுட்பங்களையும், தரமான பொருட்களையும் பயன்படுத்தி, குறியீடுகள் நீண்ட காலம் தாங்கக்கூடிய வகையில் அமைக்கப்படுகின்றன. இந்த முயற்சி, சென்னையை மிகவும் பாது காப்பான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட மாநகரமாக மாற்றுவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பயண அனுபவம் மேம்படுவதுடன், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் அதிகரிக்கும்.